ஓய்வு பெறும்போது ரூ.10 கோடி கிடைக்கும்! உடனே SIP முதலீட்டை ஸ்டார்ட் பண்ணுங்க!
70:15:15 Formula SIP Investment: 25,000 ரூபாய் மாத வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். 70% வாடகை மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகளுக்கு ஒதுக்கலாம். அவசரகால நிதிக்கு 15% ஒதுக்கலாம். இன்னொரு 15% தொகையை SIP இல் முதலீடு செய்யவேண்டும். இதன் மூலம் பணி ஓய்வு பெறும்போது ரூ.10 கோடி கார்பஸ் உருவாக்க முடியும்.
70:15:15 Formula
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் வசதியாக வாழ போதுமான பணத்துடன் ஓய்வு பெற விரும்புகிறார்கள். அதிகரித்து வரும் பணவீக்கத்தால், ஓய்வுக்காக சேமிப்பது பலருக்கு சவாலாக உள்ளது. குறிப்பாக அதிகம் சம்பாதிக்காதவர்களுக்கு.
SIP Investment Tips
இருப்பினும், கணிசமான ஓய்வூதிய நிதியைச் சேர்ப்பது சாத்தியமற்றது அல்ல. முறையான நிதி மேலாண்மை மற்றும் நல்ல முதலீட்டு உத்தியுடன், சாதாரண சம்பளம் உள்ள தனிநபர்கள்கூட கோடிக்கணக்கான ரூபாய் ஓய்வூதிய கார்பஸை உருவாக்க முடியும்.
SIP Calculator
ஓய்வூதியத் திட்டமிடலுக்காக முதலீடு செய்ய விரும்புவோருக்கு பயனுள்ள முதலீட்டு உத்திகளில் ஒன்று 70:15:15 ஃபார்முலா. இது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத் திட்டமிடலை உறுதி செய்கிறது. இந்த முதலீட்டு உத்தி நிலையான வருமானம் கிடைக்க எளிய தீர்வை வழங்குகிறது.
SIP Returns
70:15:15 ஃபார்முலா ஒருவரின் மாத வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டது. வாடகை, மளிகைப் பொருட்கள் மற்றும் பில்கள் போன்ற செலவுகளுக்கு 70%; அவசர நிதித் தேவைகளுக்கு 15%; SIP முதலீடு செய்வதற்கு 15% என்று ஒவ்வொரு மாதச் சம்பளத்தையும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
70:15:15 Formula for SIP investment
70:15:15 விதியைப் பின்பற்றி, நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் எஸ்ஐபி முதலீட்டில் ரூ.25,000 மாத வருமானம் பெறும் தொழிலாளர்களும் ரூ.10 கோடிக்கு மேல் ஓய்வூதிய நிதியைக் குவிக்க முடியும்.
SIP Investment Plan
SIP அணுகுமுறை, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுத் தொகையை வருடந்தோறும் அதிகரிக்க அனுமதிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு ஒருவரின் SIP பங்களிப்பை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிப்பதன் மூலம் குறிப்பிடத்தக்கதாக பென்ஷன் கார்பஸ் கிடைக்கும்.
SIP investment for Rs. 10 Crore Corpus
SIP முறையில் முதலீடு செய்வது சேமிப்பின் மதிப்பு அதிவேகமாக வளர உதவுகிறது. முதலீட்டாளர்கள் முன்கூட்டியே SIP முதலீட்டைத் தொடங்குவது லாபத்தைப் பெருக்க உதவுகிறது. ரூ.25,000 சம்பளம் வாங்குபவர்கள் SIP இல் எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
Mutual Fund SIPs
ரூ.25,000 சம்பளத்தில் 15% தொகையை, அதாவது ரூ.3,750 உடன் SIP முதலீட்டைத் தொடங்க வேண்டும். இந்த முதலீட்டை ஆண்டுதோறும் 10% அதிகரித்து, 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இதற்கு சராசரியாக 12% ஆண்டு வருமானம் கிடைத்தால், 25 ஆண்டுகளில் ரூ.10 கோடிக்கு மேல் சேர்ந்துவிடும்.
SIP formula
25 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.2.95 கோடியாக இருக்கும். 70:15:15 ஃபார்முலாவைக் கடைப்பிடித்து, SIP முதலீடு செய்தால், 12% ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், ரூ.7.73 கோடி கிடைக்கும். மொத்தமாக ரூ.10.68 கோடி ஓய்வூதிய நிதியைப் பெறலாம்.