கிளைம் செய்யாத இன்சூரன்ஸ் பணம் என்ன ஆகும்? நாமினிகள் செய்யவேண்டியது என்ன?
Unclaimed LIC funds: ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான எல்ஐசி பாலிசிகள் முதிர்ச்சியடைகின்றன. ஆயிரக்கணக்கான பாலிசிகள் கிளைம் செய்யப்படுகின்றன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இன்சூரன்ஸ் பணத்தைக் கிளைம் செய்யத் தவறிவிடுகின்றனர். உரிமைகோரப்படாமல் இருக்கும் இந்தப் பணம் என்ன ஆகும்?
LIC Unclaimed Funds
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) வைத்திருக்கும் உரிமை கோரப்படாத நிதிகள் பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாகிவிடுகின்றன. இதில், பாலிசிதாரர்களின் உரிமை கோரப்படாத பணத்தின் தரவுகளை எம்.பி.க்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.
சமீபத்தில் முடிவடைந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்தப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக்காட்டினார். அதைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.
LIC Insurance Policy
கடந்த 5 ஆண்டுகளில், முதிர்வு மற்றும் இறப்புக்குப் பிறகு உரிமைகோராமல் இருக்கும் பணத்தால் எல்ஐசி வசம் குறிப்பிடத்தக்க அளவு உரிமைகோரப்படாத நிதி சேர்ந்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாலிசிதாரர்கள் அல்லது அவர்களது நாமினிகள் முதிர்வுப் பலன்கள், இறப்புப் பலன்கள் அல்லது பிற பலன்களை கிளைம் செய்யத் தவறியுள்ளனர். இது எல்ஐசியிடம் உள்ள உரிமை கோரப்படாத நிதி அதிகரிக்க வழிவகுக்கிறது.
LIC funds
அரசாங்கமும் எல்ஐசியும் உரிமைகோரப்படாத நிதியை சரியான நபர்கள் கிளைம் செய்வதை உறுதிப்படுத்த பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளன. தகுதியான நாமினியிடம் இருந்து கிளைம் கோரிக்கைகள் பெறப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தொகைகள் தீர்க்கப்படும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் நிதிகள் 2016 விதிகளின்படி மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும். தகுதிவாய்ந்த நாமினிகள் அதிகபட்சம் 25 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகைகளைப் பெறலாம்.
LIC Claim Notification
இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்கான நினைவூட்டல் கடிதங்கள் அஞ்சல் வழியாகவும் ஈமெயில் மற்றும் எஸ்எம்எஸ் வழியாகவும் அனுப்பப்படுகின்றன. எல்ஐசி அதிகாரிகள் பாலிசிதாரர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்றும் உதவுகிறார்கள்.
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ரேடியோ விளம்பரம் மூலம் பாலிசிதாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பாலிசி சேவை தொடர்பான முகாம்களையும் எல்ஐசி ஏற்பாடு செய்கிறது.
LIC Insurance maturity
உரிமை கோரப்படாத இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்வதற்குத் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்பதை எல்ஐசி தனது இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. NEFT விவரங்களின் ஆன்லைன் பதிவு LIC போர்டல் மூலம் கிடைக்கிறது.
Unclaimed funds
இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் செயல்முறையை எளிதாக்கும் முயற்சியையும் எல்ஐசி மேற்கொண்டிருக்கிறது. பாலிசிதாரர்கள் வசதிக்காக எந்த எல்ஐசி கிளையிலும் உரிமைகோரல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். NEFT விவரங்கள் மூலம் உரிமைகோரல்களைத் தீர்க்க முடியும்.
LIC agents
கிரெடிட் பீரோ ஏஜென்சிகள் பாலிசிதாரர்களின் தொடர்பு விவரங்களை புதுப்பிக்க உதவுகின்றன. முகவர்கள் மற்றும் மேம்பாட்டு அலுவலர்களும் நிலுவையில் உள்ள தொகையை தீர்க்க உதவி செய்கிறார்கள். குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகரப் பகுதிகளில் உள்ள பாலிசிதாரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.