PF பணத்தை UPI மூலம் எடுக்கணுமா? இந்த 5 அப்டேட்களை உடனே செய்யுங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் UPI மூலம் PF பணத்தை நேரடியாக பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த, உங்கள் UAN, ஆதார், மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரியாக அப்டேட் செய்வது அவசியம்.

சில நிமிடங்களிலேயே PF பணத்தை பெற முடியும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான Employees' Provident Fund Organisation விரைவில் PF தொகையை நேரடியாக UPI மூலம் பெறும் புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. EPFO 3.0 திட்டத்தின் கீழ் வரும் இந்த வசதி மூலம், பல நாட்கள் காத்திருக்காமல் சில நிமிடங்களிலேயே PF பணத்தை பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை PF கிளைம் செய்தால் சரிபார்ப்பு, வங்கி செயல்முறை உள்ளிட்ட காரணங்களால் பல வாரங்கள் ஆகும் நிலை இருந்தது. ஆனால் புதிய டிஜிட்டல் முறையில், UPI இணைப்பின் மூலம் PF தொகை நேரடியாக வங்கி கணக்கிற்கு வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த சேவையை பயன்படுத்த சில முக்கிய அப்டேட்களை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும்.
UAN நம்பரை ஆக்டிவேட் செய்யுங்கள்
PF பணத்தை UPI மூலம் பெற முதலில் உங்கள் UAN (Universal Account Number) செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஏற்கனவே ஆக்டிவேட் செய்திருந்தாலும் அது தற்போதும் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். UAN inactive ஆக இருந்தால் புதிய வசதியை பயன்படுத்த முடியாது.
ஆதாருடன் UAN இணைப்பு அவசியம்
உங்கள் PF கணக்கில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் ஆதாரில் உள்ள விவரங்களுடன் முழுமையாக பொருந்த வேண்டும். சிறிய spelling mistake இருந்தாலும் verification தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. எனவே Aadhaar linking மற்றும் KYC விவரங்களை உடனே சரிபார்த்து அப்டேட் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்
EPFO portal-ல் இணைத்திருக்கும் வங்கி கணக்கு எண், IFSC code மற்றும் account holder name அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக, வங்கி கணக்கில் உள்ள பெயர், PF கணக்கில் உள்ள பெயர், Aadhaar-ல் உள்ள பெயர் இந்த மூன்றும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிகம் பயன்படுத்தாத அல்லது KYC முடிக்காத வங்கி கணக்குகளை இணைத்திருந்தால் PF transfer சிக்கலாகலாம்.
மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும்
UPI பரிமாற்றங்களின் போது OTP verification வரும். அதனால் Aadhaar, PF account மற்றும் bank account-க்கு இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். முடிந்தவரை ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்துவது verification செயல்முறையை எளிதாக்கும்.
பழைய PF கணக்குகளை merge செய்யுங்கள்
முன்பு வேலை செய்த நிறுவனங்களின் PF accounts இருந்தால் அவற்றை தற்போதைய UAN-க்கு இணைத்திருக்க வேண்டும். அதேபோல் e-Nomination விவரங்களையும் அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால் எதிர்கால PF claim மற்றும் withdrawal செயல்முறைகள் வேகமாக முடியும்.
PF பணம் எடுப்பது இனிமேல் மிகவும் எளிதா?
EPFO கொண்டு வர உள்ள இந்த புதிய UPI வசதி நடைமுறைக்கு வந்தால், ATM அல்லது UPI apps மூலம் PF தொகையை எளிதாக பயன்படுத்தும் நிலை உருவாகலாம். அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே KYC, bank linkage மற்றும் UAN verification போன்ற பணிகளை முடித்துவைத்தால் பின்னர் எந்த சிக்கலும் இல்லாமல் சேவையை பயன்படுத்த முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

