- Home
- Business
- UPI Update: இதை செய்யாட்டி ரூ.100 காணாமல் போகும்.! பயனர்களுக்கு புதிய ஷாக் கொடுத்த PhonePe..!
UPI Update: இதை செய்யாட்டி ரூ.100 காணாமல் போகும்.! பயனர்களுக்கு புதிய ஷாக் கொடுத்த PhonePe..!
PhonePe நிறுவனம் ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.இருப்பினும், இந்த விதி அனைத்து PhonePe பயனர்களுக்கும் பொருந்தாது. யாருக்கு இந்த கட்டணம் விதிக்கப்படும்? யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை? முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

யாருக்கு இந்த கட்டணம் விதிக்கப்படும் தெரியுமா?
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், Wallet சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை PhonePe வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் Wallet-களுக்கு இனி பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விதி அனைத்து PhonePe பயனர்களுக்கும் பொருந்தாது. யாருக்கு இந்த கட்டணம் விதிக்கப்படும்? யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை? முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
செயலற்ற Wallet-களுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம்
PhonePe-யின் புதிய நடைமுறையின்படி, தொடர்ந்து 365 நாட்கள் எந்தவித பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாமல் செயலற்ற நிலையில் இருக்கும் PhonePe Wallet-களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் Wallet-ல் இருக்கும் இருப்புத் தொகையிலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும்.
யாருக்கு இந்த கட்டணம் பொருந்தும்?
இந்த விதிமுறை PhonePe Wallet சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். Wallet-ல் பணம் வைத்திருந்தாலும், ஒரு ஆண்டுக்கு எந்தவித பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால், அது செயலற்ற Wallet-ஆக கருதப்பட்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை?
PhonePe செயலியை பயன்படுத்தி UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அதேபோல், Wallet வசதியை பயன்படுத்தாத PhonePe பயனர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
Wallet-ல் குறைவான இருப்பு இருந்தால் என்ன ஆகும்?
Wallet-ல் ரூ.100-க்கும் குறைவான தொகை மட்டுமே இருந்தால், அதில் இருக்கும் இருப்புத் தொகை மட்டுமே கழிக்கப்படும். கூடுதலாக எந்த தொகையும் வசூலிக்கப்படாது. Wallet இருப்பு பூஜ்ஜியமாகிவிட்டால், அதற்குப் பிறகு மேலும் கட்டணம் விதிக்கப்படாது.
இந்த முடிவுக்கான காரணம் என்ன?
நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் Wallet-களை பராமரிப்பதற்கும், அவற்றின் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக PhonePe தெரிவித்துள்ளது. செயலற்ற Wallet-களின் எண்ணிக்கையை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.
கட்டணத்தை தவிர்ப்பது எப்படி?
PhonePe Wallet பயன்படுத்துபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது Wallet மூலம் ஒரு சிறிய பணப்பரிவர்த்தனை செய்தாலே அது செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் Wallet செயலற்றதாக மாறாமல் இருப்பதுடன், ரூ.100 பராமரிப்பு கட்டணத்தையும் தவிர்க்க முடியும்.
UPI வாடிக்கையாளர்கள் டோண்ட் ஒரி
PhonePe-யின் இந்த புதிய நடைமுறை அனைத்து பயனர்களுக்கும் அல்ல; Wallet பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, Wallet சேவையை பயன்படுத்துபவர்கள் தங்களது Wallet-ஐ அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. ஆனால், UPI மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்யும் PhonePe பயனர்கள் இந்த அறிவிப்பால் கவலைப்படத் தேவையில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

