ப்ரீபெய்டு கார்டு மூலம் UPI பெமெண்ட் செய்யலாம்! ரிசர்வ் வங்கி அனுமதி!
UPI payments using prepaid payment instruments (PPI): UPI ஆப்ஸ் மூலம் முழு KYC PPI களில் இருந்து UPI பேமெண்ட்டுகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்டு கார்டு மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

UPI payments
ப்ரீபெய்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் UPI முறையில் பணம் செலுத்தவும் பெறவும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பரிசு அட்டைகள், மெட்ரோ ரயில் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளை (பிபிஐ) வைத்திருப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்கும்.
UPI payments using prepaid payment instruments
மூன்றாம் தரப்பு UPI ஆப்ஸ் மூலம் முழு KYC கொண்ட ப்ரீபெய்டு பேமெண்ட் கார்டுகளை பயன்படுத்தி UPI பேமெண்ட்டுகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. UPI பரிவர்த்தனைகள் வாடிக்கையாளரின் தற்போதைய PPI அடையாளத்தைப் பயன்படுத்தியே நடைபெறும். UPI அமைப்பை அடைவதற்கு முன், அத்தகைய பரிவர்த்தனைகள் முன்கூட்டியே அங்கீகரிக்கப்படும்.
UPI payments PPI
தற்போது, வங்கிக் கணக்கிலிருந்து UPI பரிவர்த்தனைகளைச் செய்ய அந்த வங்கியின் UPI செயலி அல்லது இதர UPI அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். ஆனால், PPI மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு PPI வழங்குநரின் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
What is PPI?
PPI என்றால் என்ன?
PPI என்பது அவற்றில் செலுத்தியுள்ள தொகையைக் கொண்டு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க பயன்படுகிறது. PPI கருவிகள் ரீசார்ஜ் முறையில் செயல்படுபவை. அவற்றில் ஏற்றப்பட்டுள்ள தொகையை பல்வேறு தேவைலகளுக்கு செலவு செய்யலாம்.
What is UPI?
UPI என்றால் என்ன?
UPI என்பது, மொபைல் போன்கள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்ககிறது. இதனை விரைவான பணப் பரிவர்த்தனைக்காக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உருவாக்கியது..