MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI Payment Rules: யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணுமா? 2000 ரூபாய் லிமிட் பத்தி NPCI விளக்கம்

UPI Payment Rules: யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணுமா? 2000 ரூபாய் லிமிட் பத்தி NPCI விளக்கம்

UPI Payment Rules: யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணும்னு வந்த செய்தியால சிறு வியாபாரிகள் பயப்படத் தேவையில்லை. 2000 ரூபாய்க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எந்த MDR அல்லது ஜிஎஸ்டி வரியும் கிடையாதுனு NPCI தெளிவா சொல்லியிருக்கு.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 23 2026, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
யுபிஐ பேமெண்ட்டுக்கும் ஜிஎஸ்டியா?
Image Credit : Asianet News

யுபிஐ பேமெண்ட்டுக்கும் ஜிஎஸ்டியா?

யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணும்னு ஒரு செய்தி கொஞ்ச நாளா பரவிட்டு இருக்கு. இதனால டிஜிட்டல் பேமெண்ட் செலவு அதிகமாகும்னு சிறு வியாபாரிகள் கவலைப்பட்டாங்க. ஆனா, இந்த செய்தி முற்றிலும் பொய்னு என்பிசிஐ (National Payments Corporation of India) இப்போ தெளிவுபடுத்தியிருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
என்பிசிஐ கொடுத்த விளக்கம்
Image Credit : Asianet News

என்பிசிஐ கொடுத்த விளக்கம்

மக்கள் மத்தியில இருக்கிற குழப்பத்தை தீர்க்க என்பிசிஐ ஒரு விளக்கம் கொடுத்திருக்கு. சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகள்ல இந்த வரியால எந்த பாதிப்பும் வராது. "யுபிஐ எம்டிஆர் மேல ஜிஎஸ்டி விதிச்சா சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவாங்கனு சில செய்திகள் வருது. இது முற்றிலும் தவறான தகவல்"னு X (ட்விட்டர்) தளத்துல என்பிசிஐ பதிவிட்டுருக்கு.

39
எம்டிஆர் விதிமுறைகள் யாருக்கு?
Image Credit : AI Generated

எம்டிஆர் விதிமுறைகள் யாருக்கு?

பெரிய அளவிலான வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் இந்த எம்டிஆர் விதிமுறைகள் பொருந்தும்னு என்பிசிஐ சொல்லியிருக்கு. நம்ம அன்றாட டிஜிட்டல் பேமெண்ட்டுகளை இது பாதிக்காது. "2000 ரூபாய்க்கு மேல நடக்குற பி2எம் (Person-to-Merchant) பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் எம்டிஆர் பொருந்தும். 2000 ரூபாய் வரைக்கும் எம்டிஆர் ஜீரோ, அதனால ஜிஎஸ்டியும் கிடையாது"னு அவங்க தெளிவுபடுத்திருக்காங்க.

ராகு-கேது பெயர்ச்சி வருவதற்கு முன் அதிர்ஷ்டம் அடிக்கும் 4 ராசிகள்; அடுத்த 2 மாதம் முக்கியம்!

49
2000 ரூபாய் லிமிட்
Image Credit : Gemini AI

2000 ரூபாய் லிமிட்

அரசு தரவுகளின்படி, வியாபாரிகளுக்கு வர்ற யுபிஐ பேமெண்ட்டுகள்ல 96 சதவீதத்துக்கும் மேலானவை 2000 ரூபாய்க்குக் கீழதான் இருக்கு. அதனால, பெரும்பாலான யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு எம்டிஆர் கட்டணமே வராது. எம்டிஆர் இல்லைனா, ஜிஎஸ்டி கட்ட வேண்டிய அவசியமும் இல்லைனு என்பிசிஐ சொல்லியிருக்கு.

59
வரி விதிப்பு நிபந்தனைகள்
Image Credit : X

வரி விதிப்பு நிபந்தனைகள்

ஜிஎஸ்டி வளையத்துக்குள் வர்ற வியாபாரிகள் தங்கள் கைக்காசைப் போட்டு எம்டிஆர் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை. "பொருட்களை விற்கும்போது கட்டுற ஜிஎஸ்டியோட, எம்டிஆர் மேல கட்டுற ஜிஎஸ்டியை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். இன்புட் வரியை அவுட்புட் வரியோட சரிசெய்ற மாதிரிதான் இதுவும். இதனால வியாபாரிகளுக்கு எந்த நஷ்டமும் வராது"னு பேமெண்ட் ஆணையம் விளக்கியிருக்கு.

69
இவர்களுக்கு வரி கிடையாது!
Image Credit : Asianet News

இவர்களுக்கு வரி கிடையாது!

குறைவான பரிவர்த்தனைகள் செய்ற சிறு வியாபாரிகளுக்கும் இந்த விதியில இருந்து விலக்கு இருக்கு. "மாசத்துக்கு 1 லட்சம் ரூபாய் வரைக்கும் யுபிஐ பேமெண்ட் வாங்குற வியாபாரிகள் எந்த எம்டிஆர் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதனால அவங்களுக்கு எம்டிஆர் மீதான ஜிஎஸ்டியும் கிடையாது"னு என்பிசிஐ சொல்லியிருக்கு.

79
சாமானியர்களுக்கு நிம்மதி
Image Credit : Asianet News

சாமானியர்களுக்கு நிம்மதி

டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு செலவு அதிகமாகும்னு வந்த வதந்திகளை என்பிசிஐ மறுத்திருக்கு. "எம்டிஆர் மேல ஜிஎஸ்டி விதிச்சா வியாபாரிகளுக்கு கூடுதல் சுமை வரும்னு சொல்றதுல எந்த உண்மையும் இல்லை. பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகளையும், சிறு வியாபாரிகளையும் இது எந்த வகையிலும் பாதிக்காது"னு என்பிசிஐ உறுதியா சொல்லியிருக்கு.

89
2000 ரூபாய்க்கு மேல் 0.4% எம்டிஆர்
Image Credit : Asianet News

2000 ரூபாய்க்கு மேல் 0.4% எம்டிஆர்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி என்பிசிஐ ஒரு புதிய விதியை கொண்டு வந்தாங்க. அதன்படி, 2000 ரூபாய்க்கு மேல நடக்குற யுபிஐ வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆர் வசூலிக்கப்படும். ஆனா, சாதாரண வாடிக்கையாளர்கள் வழக்கம் போல எந்த கட்டணமும் இல்லாம யுபிஐயை இலவசமா பயன்படுத்தலாம்.

99
அதிகபட்ச வரம்பு 300 ரூபாய்
Image Credit : AI Generated

அதிகபட்ச வரம்பு 300 ரூபாய்

சுமார் 96 சதவீத பி2எம் பரிவர்த்தனைகள்ல எந்த பாதிப்பும் இருக்காதுனு அரசு சொல்லியிருக்கு. வசூலிக்கப்படுற எம்டிஆர் கட்டணம், வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஆப் நிறுவனங்களுக்குப் பிரிச்சு கொடுக்கப்படும். புதிய விதிப்படி, 2000 ரூபாய்க்கு மேலான பி2எம் யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு 0.4% எம்டிஆர் பொருந்தும். ஆனா, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமா 300 ரூபாய் மட்டும்தான் எம்டிஆர் வசூலிக்கப்படும்னு வரம்பு நிர்ணயிச்சிருக்காங்க.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI கொடுப்பனவு
UPI பரிவர்த்தனைகள்
ஜி.எஸ்.டி
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?
Recommended image2
Fridge: காய்கறி, பழங்கள் சீக்கிரம் அழுகுதா? ஃப்ரிட்ஜில் எந்த பொருளை எங்கே வைக்க வேண்டும்? வீணாகும் செலவை தடுக்க 10 குறிப்புகள்!
Recommended image3
Property Registration: பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்.! இனி EC-க்கு கட்டணம் இல்லை? நடுத்தர மக்களுக்கு என்ன பயன்?
Related Stories
Recommended image1
Today Horoscope: செப்டம்பர் 23 ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்... இன்று 12 ராசிகளுக்கும் என்ன பலன்?
Recommended image2
Property Registration: பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்.! இனி EC-க்கு கட்டணம் இல்லை? நடுத்தர மக்களுக்கு என்ன பயன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved