பான் கார்டு இருக்கா.. உடனே இதை செய்யுங்க.. இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்
பான் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆதார் பதிவு ஐடி மூலம் பான் கார்டு வைத்திருந்தால், அசல் ஆதாரை வைத்து அப்டேட் செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படலாம்.

ஆதார் அட்டை அல்லது பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அதை எப்போதும் கவனமாக வைத்திருப்பது அவசியம் ஆகும். வங்கி வேலைகள் முதல் மற்ற நிதி முதலீடுகள் வரை பான் கார்டு அவசியம். இப்போது பான் கார்டு குறித்து வருமான வரித்துறையின் புதிய வழிகாட்டுதல்களை பார்ப்பதும் முக்கியம் ஆகும்.
PAN Card Rules
பான் கார்டு புதிய விதிகள்
பான் (PAN) கார்டில் மாற்றம் செய்யாவிட்டால். வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, உங்கள் பான் கார்டை விரைவாக அப்டேட் செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்களே சிக்கலில் சிக்குவீர்கள். ஆதார் பதிவு ஐடி மூலம் பான் கார்டு வைத்திருந்தால், உங்கள் பான் கார்டை உங்கள் அசல் ஆதாரை வைத்து அப்டேட் செய்ய வேண்டும்.
PAN Aadhaar Link
பான் கார்டு இணைப்பு
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த இணைப்பை முடிக்க வேண்டும். ஆதார் பதிவு ஐடியை அடிப்படையாகக் கொண்டு பான் கார்டு வழங்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் ஆதார் கார்டு செயலிழக்கப்படலாம். மேலும் அட்டை பயன்படுத்த முடியாததாகிவிடும்.
Bank Account
வங்கி பரிவர்த்தனை
பான் கார்டு வேலை செய்யவில்லை என்றால் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. வங்கி பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படும். வங்கி கணக்கில் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த முதலீட்டிலும் சிக்கல் ஏற்படும். சொத்து வாங்கும் விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
PAN Link
பான் கார்டு அப்டேட்
இந்த அப்டேட்டை செய்ய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழையவும். அங்கு பான் எண்ணை கொடுக்கவும். ஆதார் இணைக்க விருப்பத்தை கிளிக் செய்யவும். 12 இலக்க ஆதார் எண்ணை கொடுக்கவும். மொபைலுக்கு வரும் ஓடிபி கொடுக்கவும். இப்படி பதிவு செய்து கொள்ளுங்கள். உறுதிப்படுத்தல் செய்தி வந்தால், உங்கள் பான் கார்டு அப்டேட் ஆகிவிட்டது என்று அர்த்தம் ஆகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.