MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ

Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ

தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 12 2026, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இளைஞர்கள், பெண்கள்,சிறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி
Image Credit : Getty

இளைஞர்கள், பெண்கள்,சிறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி

இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுபவர்களை விட வேலை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வங்கிக் கடன் பெறுவதில் சிரமம் எதிர்கொள்ளும் பலருக்கு அரசின் மானிய மற்றும் குறைந்த வட்டி கடன் திட்டங்கள் ஒரு பெரிய ஆதரவாக உள்ளன. அந்த வகையில், மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
Image Credit : Asianet News

ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் கடன், சிறு வணிக கடன், சேவைத் தொழில் கடன் மற்றும் தொழில் விரிவாக்கக் கடன் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்தக் கடன்களுக்கு சுமார் 6 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுவதால், தனியார் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Related image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
36
புதிய தொழில்களை தொடங்கி சாதிக்கலாம்
Image Credit : Gemini AI

புதிய தொழில்களை தொடங்கி சாதிக்கலாம்

இந்த நிதி உதவியை பயன்படுத்தி சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்கள், உணவுப் பொருள் தயாரிப்பு மையங்கள், மளிகைக் கடைகள், கணினி மையங்கள், மொபைல் சேவை மையங்கள், வாகன பராமரிப்பு நிலையங்கள், தையல் மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்கலாம். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களும் தங்களது தொழிலை விரிவுபடுத்த இந்தக் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

46
கடன் பெறுவதற்கான தகுதிகள்
Image Credit : Getty

கடன் பெறுவதற்கான தகுதிகள்

  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
  • அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
  • பொதுவாக 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். 
  • குடும்ப ஆண்டு வருமானம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். 
  • தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை அல்லது தொழில் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 
  • ஆதார் அட்டை, சமூகச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முகவரி ஆதாரம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். 
  • வங்கி கணக்கு மற்றும் தேவையான பிற நிதி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
56
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, தகுதி சரிபார்க்கப்பட்டு கடன் ஒப்புதல் வழங்கப்படும்.

66
தமிழ்நாடு அரசின் இந்த கடன் உதவித் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பு
Image Credit : Google

தமிழ்நாடு அரசின் இந்த கடன் உதவித் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பு

சொந்தமாக தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்பும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்த கடன் உதவித் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. குறைந்த வட்டி, அதிகபட்ச கடன் தொகை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஆதரவு போன்ற அம்சங்கள் இந்த திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுகின்றன. தொழில் தொடங்கும் கனவை நனவாக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
முதலீடு
கடன்
தமிழ்நாடு அரசு
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Savings Scheme 2026: புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!
Recommended image2
Income Tax-Free State: 1 கோடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி இல்லை! இந்தியாவில் இப்படி ஒரு இடமா?
Recommended image3
Ethanol Blended Petrol: வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்..! பெட்ரோல் மீதான கலால் வரி முழுமையாக ரத்து..
Related Stories
Recommended image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Recommended image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved