- Home
- Business
- காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
காப்பீட்டுத் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும். இதன் விளைவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிக்கும். இந்த நடவடிக்கை உள்நாட்டு காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FDI limit in insurance
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் நிவாரணம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 8வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அதில், காப்பீட்டுத் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
FDI limit in insurance
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு (FDI limit) 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். "காப்பீட்டுத் துறைக்கான FDI வரம்பு 100% ஆக அதிகரிக்கப்படும், ஆனால் இந்தியாவிற்குள் முழு பிரீமியத்தையும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்" என்று தெரிவித்தார்.
FDI limit in insurance
மேலும், "வெளிநாட்டு முதலீட்டை நிர்வகிக்கும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்படும்" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
FDI limit in insurance
இன்சூரன்ஸ் துறையில் கொண்டு வந்திருக்கும் இந்த சீர்திருத்தமானது இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே போட்டியை அதிகரிக்கும். உள்நாட்டு காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.