MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பண்டிகை காலத்துக்கு முன் மக்களுக்கு ஷாக்.. டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை 'கிடுகிடு' உயர்வு!

பண்டிகை காலத்துக்கு முன் மக்களுக்கு ஷாக்.. டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை 'கிடுகிடு' உயர்வு!

TV, AC Price Hike: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கும் நிலையில் ஏசி, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை உயர இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Sep 27 2026, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை கிடுகிடு உயர்வு
Image Credit : AI

டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை கிடுகிடு உயர்வு

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, அதன்பிறகு தீபாவளி வரப்போகிறது. இந்த பண்டிகை சீசனுக்கு முன்னதாகவே மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஏசி, எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை கணிசமாக உயரப்போகிறது. தாமிரம், இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்த தயாராகிவிட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
Image Credit : pinterest

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தாமிரம், அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவையே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும்.

ஏசி, பிரிட்ஜ் எவ்வளவு விலை உயருது?

ஏசி விலை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. அதேசமயம், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், எல்.இ.டி டிவி விலையை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்த சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சில நிறுவனங்கள் இன்னும் நிலைமையை கவனித்து வருகின்றன.

விலை உயர்ந்தால் அது விற்பனையை பாதிக்கும் என பல நிறுவனங்கள் நினைக்கின்றன. ஆனால், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஏற்கனவே பழைய விலையில் வாங்கிய ஸ்டாக் இருப்பதால், இந்த விலை உயர்வின் தாக்கம் இப்போதைக்கு குறைவாகவே இருக்கும் என மற்றவர்கள் கருதுகின்றனர்.

33
நிறுவனங்கள் சொல்வது என்ன?
Image Credit : gemini

நிறுவனங்கள் சொல்வது என்ன?

ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்சஸ், ஹையர், டைகின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. ஹிட்டாச்சி பிராண்ட் ஏசிகளை விற்கும் எல்.ஜி மற்றும் போஷ் ஹோம் கம்ஃபர்ட் நிறுவனங்களும் ஏசி விலையை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளன. பானாசோனிக் நிறுவனம் தற்போதைய விலை உயர்வு குறித்து இன்னும் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் எம்.டி பி. தியாகராஜன் பேசுகையில், 'மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், ஏசி மற்றும் டீப் ஃப்ரீசர்களின் விலையை ஏற்கனவே 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்திவிட்டோம். தாமிரம், இரும்பு, பிளாஸ்டிக் விலை ஏறியதால், இந்த வருஷம் மட்டும் இதுவரை 3 விலையை உயர்த்தி இருக்கிறோம்'' என்றார்.

கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குரூப் பிசினஸ் ஹெட் கமல் நந்தி கூறுகையில், ''மூலப்பொருட்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பல பொருட்களின் விலையை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று. இருந்தாலும், பழைய விலையில வாங்குன ஸ்டாக் இன்னும் ஒன்றரை மாசத்துக்கு மார்க்கெட்டில் கிடைக்கும்'' என்று தெரிவித்தார். பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஆயுத பூஜைக்கு முன் அகவிலைப்படி உயர்வு? சூப்பர் அப்டேட்!
Recommended image2
Post Office Scheme: பணம் இரட்டிப்பாகும் அஞ்சலக திட்டம்! ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம் - முழு விபரம்
Recommended image3
Best Smartwatches Under 5000: 5000 ரூபாய்க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்!
Related Stories
Recommended image1
32, 43, 55 இன்ச்... உங்க வீட்டுக்கு எந்த டிவி கரெக்ட்? ஏமாறாம வாங்க இந்த ஒரு விஷயத்தை கவனிங்க!
Recommended image2
பளபளக்கும் பளிங்கு, ராயல் லுக் டைல்ஸ்: வரவேற்பறையின் அழகை பிரம்மாண்டமாக்கும் 6 டிவி யூனிட் ஐடியாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved