MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நடுத்தர மக்கள் இனி ஐபோன்களை கனவில் கூட நினைக்க முடியாது; iphone விலை இவ்வளவு உயர்வா?

நடுத்தர மக்கள் இனி ஐபோன்களை கனவில் கூட நினைக்க முடியாது; iphone விலை இவ்வளவு உயர்வா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆப்பிள் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : Rayar A
Published : Apr 08 2025, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Apple iPhones Price Hike: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்துள்ளார். குறிப்பாக இந்தியா மீது 26% வரி, சீனா மீது 34% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் காரணமாக, ஐபோன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் ஐபோன்களின் தயாரிப்புகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக சீனா உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Apple iPhone

Apple iPhone

தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரியை விதித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா கூடுதலாக 34 சதவீத வரியைச் சேர்த்தது, இது ஐபோன் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த வரி விதிப்பு தொடர்ந்து நடைமுறையில் இருந்தால், எதிர்காலத்தில் ஐபோன் விலைகள் 2,000 அமெரிக்க டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.1.71,731) உயரக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. 

அறிக்கைகளின்படி, ஐபோன் 16 இன் அடிப்படை மாடலின் விலை தற்போது அமெரிக்காவில் 799 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.68,590) உள்ளது. ஆனால் இது 43 சதவீதம் வரை விலை அதிகரித்து 1,142 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.98,050) ஆக உயரக்கூடும். மேலும் தற்போது 1,599 டாலர்களுக்கு (ரூ.1,37.297) விற்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சுமார் 2,300 டாலர்களாக (ரூ.1,97,502) உயரக்கூடும்.

சீனா மீது கூடுதலாக 50% வரி! போட்டுத் தாக்கும் டொனால்ட் டிரம்ப்! 1 நாள் கெடு விதிப்பு!

34
iphone Price Hike

iphone Price Hike

டொனால்ட் டிரம்ப் தனது முந்தைய பதவிக் காலத்திலும் சீனா மீது வரிகளை விதித்தார். ஆனால் அந்த நேரத்தில் ஆப்பிள் ஐபோன்களுக்கு சில நிவாரணங்களை வழங்கத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த முறை வரி விதிப்பில் ஐபோன்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. புதிய வரி விதிப்பால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கலாம். விலைகளை உயர்த்த வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தால், அதிகரித்த செலவுகள் நிறுவனத்தின் மீதே விழும். மேலும் கட்டணங்களின் விளைவாக உற்பத்தி செலவுகள் 43% உயரக்கூடும்.

44
iPhone manufacturers China, India

iPhone manufacturers China, India

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. புதிய வரிகள் அமலில் இருப்பதால், அமெரிக்காவில் ஐபோன்களுக்கான விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் வரி அறிவிப்புக்கு முன்னதாக, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சந்தையில் ஐபோன்களின் விலை உடனடியாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை.. வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்கள் டிப்ஸ்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன்
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
சீனா
இந்தியா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved