MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Train Travel Fine: டிரெயின்ல ஊருக்கு போறீங்களா?! இதை செஞ்சா ரூ.5,000 Fine! 6 மாதம் ஜெயில்.!

Train Travel Fine: டிரெயின்ல ஊருக்கு போறீங்களா?! இதை செஞ்சா ரூ.5,000 Fine! 6 மாதம் ஜெயில்.!

தெற்கு ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இந்த சின்ன விஷயத்தை செஞ்சா ரூ.5,000 அபராதம் முதல் 6 மாத சிறை தண்டனை வரை விதிக்கப்படும். ரயில் பணிகள் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்தான் இது!

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 14 2026, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
யாருக்கு சிறை, யாருக்கு அபராதம்?
Image Credit : stockphoto

யாருக்கு சிறை, யாருக்கு அபராதம்?

ரயிலில் பயணம் செய்யும்போது மொபைலில் ஸ்பீக்கர் மோடில் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது சத்தமாகப் பேசுவது இனி சாதாரண விஷயமல்ல. தெற்கு ரயில்வே இப்போது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அல்லது வீடியோ பார்த்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்ந்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். இந்த அறிவிப்பு பல பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையும் படிக்கலாமே - 8TH PAY COMMISSION: சம்பளம் ரூ.1.19 லட்சமாக உயருமா? 4% அகவிலைப்படி அதிகரிப்பின் முழுக் கணக்கு இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சட்டம் என்ன சொல்கிறது?
Image Credit : freepik

சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 145(2)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜன விஷ்வாஸ் (திருத்தம்) சட்டம் 2026 மூலம் இந்த விதிகள் இன்னும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வணிகப் பிரிவு அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிக்கெட் பரிசோதகர் (TTE) அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் உள்ள வணிகப் பிரிவு அலுவலர்கள் நேரடியாக அபராதம் விதிக்கலாம். டிக்கெட்டை ரத்து செய்து ரயிலிலிருந்து இறக்கவும் அதிகாரம் உள்ளது. இது ரயில் நிலையங்களுக்கும் பொருந்தும். இதையும் படிக்கலாமே - Buying a House or Plot?: வீடு, வீட்டுமனை வாங்கப் போறீங்களா? இந்த 12 விஷயங்களைச் சரிபார்க்க மறந்துடாதீங்க! பல லட்சம் மிச்சமாகும்.!

38
ஏன் இந்த கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டது?
Image Credit : our own

ஏன் இந்த கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டது?

உயர் வேக மொபைல் இன்டர்நெட் வசதியால் பலர் ஸ்பீக்கர் மூலம் ரீல்ஸ், பாடல்கள், வீடியோக்களை இயக்குவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏசி கோச் போன்ற மூடிய இடங்களில் இது மற்ற பயணிகளுக்கு பெரும் தொந்தரவாகிறது. இரவு நேரங்களில் தூங்கும் பயணிகளுக்கு இன்னும் அதிக சிரமம் ஏற்படுகிறது. சத்தமான உரையாடல்களும், நீண்ட நேர தொலைபேசி அழைப்புகளும் பயண அனுபவத்தைக் கெடுக்கின்றன. இதனால் பயணிகளிடமிருந்து புகார்கள் அதிகரித்ததால் ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. இதையும் படிக்கலாமே - DA Hike Update For Central Government Employees : DA உயர்வால் போக்குவரத்து படியும் அதிகரிக்குமா? யாருக்கு எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும்?

48
என்னென்ன செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன?
Image Credit : our own

என்னென்ன செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன?

  1. மொபைல் அல்லது புளூடூத் ஸ்பீக்கரில் அதிக சத்தத்தில் பாடல் கேட்பது
  2. வீடியோ, ரீல்ஸ் அல்லது திரைப்படங்களை ஸ்பீக்கர் மூலம் பார்ப்பது
  3. சத்தமாக தொலைபேசியில் பேசுவது
  4. பிறருக்கு தொந்தரவு தரும் எந்தவித சத்தமும்

ஹெட்போன் அல்லது இயர்ஃபோன் பயன்படுத்தி கேட்பது முழுமையாக அனுமதிக்கப்படுகிறது. அதுதான் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழி. ரயில்வே அதிகாரிகள் முதலில் எச்சரிக்கை விடுவார்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்தால் அபராதம், டிக்கெட் ரத்து மற்றும் ரயிலிலிருந்து இறக்குதல் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மீறினால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். இதையும் படிக்கலாமே - Rice Price: ரூ.50க்கு சூப்பர் அரிசி.! தமிழக அரசு எடுத்து அதிரடி முடிவு.?! எங்க கிடைக்கும்? எப்படி வாங்கலாம்?

58
பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Freepik

பயணிகள் என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் இயர்ஃபோன் அல்லது ஹெட்போன் எடுத்துச் செல்லுங்கள். ரயிலில் மொபைல் பயன்படுத்தும்போது அதை கட்டாயம் உபயோகியுங்கள். சத்தமாகப் பேச வேண்டியிருந்தால், கோச் வெளியே சென்று பேசுங்கள். ரயில்வே அதிகாரிகள் எச்சரித்தால் உடனே நிறுத்துங்கள். புகார் செய்ய 139 ஹெல்ப்லைன் அல்லது ரயில்வே ஆப் மூலம் தெரிவிக்கலாம். ரயில் நிலையங்களிலும் இந்த விதி பொருந்தும் என்பதால் அங்குள்ளும் கவனமாக இருக்க வேண்டும்.

68
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவு
Image Credit : Google

அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவு

தெற்கு ரயில்வே அனைத்து டிவிஷன்களிலும் விழிப்புணர்வு அறிவிப்புகளைத் தொடங்கியுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படும். அக்டோபர் 20-க்குள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

78
இயர்ஃபோனை நினைவில் கொள்ளுங்கள்
Image Credit : Google

இயர்ஃபோனை நினைவில் கொள்ளுங்கள்

ரயில் பயணம் பலருக்கு அவசியமான ஒன்று. ஆனால் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் அமைதியைக் குலைக்கக் கூடாது. இந்த புதிய விதி பயணத்தை அனைவருக்கும் வசதியாகவும் அமைதியாகவும் மாற்றும். அடுத்த முறை ரயிலில் ஏறும்போது மொபைல் எடுக்கும் முன் இயர்ஃபோனை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் ரூ.1,000 அபராதம் அல்லது அதற்கும் மோசமான விளைவுகள் காத்திருக்கின்றன.

88
விதிகளை பின்பற்றவேண்டியது அவசியம்
Image Credit : freepik

விதிகளை பின்பற்றவேண்டியது அவசியம்

சக பயணிகளின் அமைதியை மதித்து, பொறுப்புடன் பயணம் செய்யுங்கள். இதுதான் இப்போதைய ரயில் பயணத்தின் புதிய விதி. அனைவரும் இதைப் பின்பற்றினால் ரயில் பயணம் இன்னும் இனிமையாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ரயில்வே விதிகள்
தொடருந்து நிலையம்
தொடர்வண்டிப் போக்குவரத்து
ஏசியாநெட் நியூஸ்
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்
ரயில் பயணப் பெட்டி விதிகள்
தொடர்வண்டி பயணச்சீட்டு
பயணம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
Recommended image2
8th Pay Commission : 8-வது ஊதியக் குழுவுக்கு 1 வயசு! சம்பளம், பென்ஷன் எவ்வளவு ஏறும்?
Recommended image3
EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Related Stories
Recommended image1
Business: மாதம் ரூ.10,000 கூடுதல் வருமானம் வேண்டுமா? வீட்டிலிருந்தே செய்யக்கூடிய 7 தொழில்கள்!
Recommended image2
Business Training: மாத வருமானம் ரூ.30 ஆயிரம் நிச்சயம்.! லாபத்தை அள்ளித்தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! 3 நாள் பயிற்சி காத்திருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved