AI படிப்புக்கு டாப் 5 பல்கலைக்கழகங்கள்! படிப்பை முடித்தவுடன் மில்லியன் டாலர் சம்பளத்துடன் வேலை!
Top Universities For AI Courses: உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு அதிக தேவை உள்ளது, தொலைபேசிகள் முதல் கார்கள் வரை AI தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில், AI பொறியாளர்கள் $108K முதல் $213K வரை சம்பாதிக்கிறார்கள்.
AI courses in Top Universities
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு அதிக தேவை உள்ளது, தொலைபேசிகள் முதல் கார்கள் வரை AI தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில், AI பொறியாளர்கள் $108K முதல் $213K வரை சம்பாதிக்கிறார்கள்.
Tsinghua University
சிங்குவா பல்கலைக்கழகம்: சிங்குவாவில் 1911 இல் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் மின்னணு தகவல்தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய AI படிப்புகளுக்கு உலகளவில் புகழ்பெற்றது.
Nanyang Technological University
நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணிறவு தொழில்நுட்பத்தில் BSc படிப்புக்குப் பெயர் பெற்ற பல்கலைக்கழகம் இது. கோட்பாடு மற்றும் நடைமுறை AI திறன்கள் பற்றிய கல்வியை வழங்குகிறது.
University of Electronic Science and Technology of China
சீனாவின் மின்னணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: இந்தப் பல்கலைக்கழகம் மனித-கணினி தொடர்பு, பிக் டேட்டா, இயந்திர கற்றல் மற்றும் ஆழமான கற்றல் ஆகியவற்றில் AI நிபுணத்துவத்தை வழங்குகிறது
University of Technology Sydney
சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் ஒன்றாக விளங்குகிறது. AI மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
National University of Singapore
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்: 1905 இல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டத்தை வழங்குகிறது. இது IT துறையில் ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.