5 வருடத்தில் அதிக லாபம் தரும் டாப் 5 மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. மிட்கேப் ஃபண்டுகள் ஆபத்து மற்றும் வருமானத்தின் சரியான சமநிலையைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஃபண்டுகளிலிருந்து நீண்ட காலத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ஃபண்டுகள் தங்கள் சொத்துக்களில் குறைந்தது 65% ஐ மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்கின்றன.

உங்கள் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், மிட்கேப் ஃபண்டுகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளின் செயல்திறனைப் பார்க்கும்போது, பல மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 30% வரை வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளன. அதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டாப் 5 ஃபண்டுகளில் ஏதேனும் ஒன்றில் மொத்தமாக முதலீடு செய்திருந்தால், அந்தப் பணம் 4 மடங்கு பெருகியிருக்கும்.
Quant Mid Cap Fund – Regular
குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் - ரெகுலர்:
2001ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மிட்கேப் ஃபண்டில் 5 ஆண்டுகளில் கிடைத்துள்ள மொத்த வருமானம் 29.44% ஆகும். 5 ஆண்டுகளுக்கும முன்பு, ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ. 3,63,890 ஆக மாறியிருக்கும். இதில் SIP வருமானம் (5 ஆண்டுகள்) 26.51%.
Motilal Oswal Midcap Fund – Regular Plan
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் - ரெகுலர்:
2014ஆம் ஆண்டு இந்த மிட்கேப் ஃபண்டு அறிமுகமானது. இதில் 5 ஆண்டுகளில் ஈட்டியிருக்கும் மொத்த வருமானம் 27.64% ஆகும். ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது ரூ. 3,39,200 ஆக வளர்ந்திருக்கும். இதில் SIP வருமானம் (5 ஆண்டுகள்): 34.12%.
Edelweiss Mid Cap Fund – Regular Plan
எடெல்வைஸ் மிட் கேப் ஃபண்ட் - ரெகுலர்:
இது 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மிட்கேப் ஃபண்டில் மொத்த வருமானம் (5 ஆண்டுகள்): 26.32% கிடைத்துள்ளது. ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 5 ஆண்டுகளில் ரூ. 3,22,090 ஆக மாறியிருக்கும். இதில் SIP வருமானம் (5 ஆண்டுகள்) 28.35%.
HDFC Mid-Cap Opportunities Fund
ஹெச்டிஎஃப்சி மிட்-கேப் ஆபர்சுனிட்டீஸ் ஃபண்டு:
இந்த ஃபண்டு 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 5 ஆண்டுகளில் கிடைத்துள்ள மொத்த வருமானம் 26.24%. இதில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தவர்கள் 5 வருடங்ககளில் ரூ. 3,21,020 ஆக உயர்ந்திருக்கும். இதில் SIP முதலீட்டுக்கான வருமானம் (5 ஆண்டுகள்) 28.58%.
Nippon India Growth Fund – Growth
நிப்பான் இந்தியா குரோத் நிதி - குரோத்:
2007ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த் மியூச்சுவல் ஃபண்டு 5 ஆண்டுகளில் மொத்த வருமானம் 25.55%. இதில் ரூ. 1 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 3,12,310 கிடைத்திருக்கும். இதில் SIP முதலீட்டு வருமானம் 5 ஆண்டுகளில் 27.95% ஆக உள்ளது.