- Home
- Business
- கார்களில் 'பாஸ்டேக்' ஒட்டவில்லைனா அவ்வளவு தான்.! உங்களை ஹாட்லிஸ்டில் சேர்க்கப்போறாங்க! - வெளியான ஷாக் தகவல்
கார்களில் 'பாஸ்டேக்' ஒட்டவில்லைனா அவ்வளவு தான்.! உங்களை ஹாட்லிஸ்டில் சேர்க்கப்போறாங்க! - வெளியான ஷாக் தகவல்
FASTag ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டாமல் வைத்திருப்பவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஸ்டிக்கரை ஒட்டாமல் வைத்திருந்தால், FASTag இயங்காது, புதிய FASTag வாங்க வேண்டியிருக்கும்.

வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்யும் FASTag
இந்தியாவில் நவீன சாலைகள், தரமான சுங்கச்சாவடி வசதிகள் வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் முக்கிய அங்கமாகவே FASTag கொண்டு வரப்பட்டது. எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடி அடைவதற்குள் முன்கூட்டியே டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. ஆனால் தற்போது வாகன ஓட்டிகள் மீது ஒரு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
"கண்ணாடியில் ஒட்டவில்லை"
பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பலர் FASTag ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டாமல், சாதாரணமாக கைக்குட்டையில் வைத்திருப்பது தெரிந்துள்ளது. சிலர் FASTag ஸ்டிக்கரை முறையாக ஒட்டாமல், உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் அங்கீகார சோதனைக்கு இடமளிக்கின்றனர். இதனால் சுங்கச்சாவடி வசதிகள் பழுதடைவதுடன், கட்டண வசூலில் தடையையும் ஏற்படுத்துகிறது.
கட்டணம் வசூலிக்க தாமதம்
FASTag ஸ்டிக்கர் வாகனத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதன்மூலம் ரீடர் இயந்திரம் அதனை எளிதில் வாசித்து கட்டணம் திரட்டி விடும். ஸ்டிக்கரை ஒட்டாமல் வைத்தால் ரீடர் அடையாளம் காண முடியாமல் கட்டணம் வசூலிக்க தாமதம் ஏற்படும். இது நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலை வளர்க்கும் அபாயம் உண்டு என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
புகார் அளிக்க உத்தரவு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. FASTag ஸ்டிக்கரை ஒட்டாத வாகனங்கள் மீது உடனடி புகாரளிக்க சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தவறான முறையில் FASTag வைத்திருக்கும் வாகனங்களை ‘கருப்பு பட்டியல்’ அல்லது ‘ஹாட்லிஸ்ட்’ செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால், அந்த FASTag இயங்காது. அதாவது வாகன ஓட்டிகள் மீண்டும் பணம் செலுத்தி புதிய FASTag வாங்க வேண்டிய கட்டாயம் வரும். இதனால் நேரமும் பணமும் வீணாவதுடன், சாலையில் பயணிக்கும் போது பல்வேறு தடைகள் ஏற்படும்.
"கண்டீப்பா பாலோ செய்ய வேண்டும்"
அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்கச்சாவடியில் இச்சிக்கலில் சிக்காமல் இருக்க, உடனடியாக தங்களது FASTag ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் நியமப்படி ஒட்ட வேண்டும். எந்த விதமான சந்தேகமும் இருந்தால் உங்கள் வங்கி அல்லது FASTag வழங்குநரிடம் ஆலோசனை பெறலாம். இந்த புதிய கட்டுப்பாடு வாகனப் போக்குவரத்து ஒழுங்கமைவையும், தானியங்கி வசூல் முறையையும் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை ஆகும். FASTag பயன்படுத்தும் ஓட்டிகள் அனைவரும் இதனை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்.