கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத தங்கம் விலை! இன்று 1 கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இன்றும் அதே வேகத்தில் ஏற்றம் கண்டுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆட்டம் காட்டும் தங்கம் விலை
இந்தியாவில் தங்கத்தின் விலையானது மனித உடலில் ஏற்படும் பிரஷர் நோய்க்கு இணையானது. இரண்டுமே எப்பொழுது ஏறும், எப்பொழுது இறங்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இவை அதிகமாக உயர்ந்தாலும் புதிதாக வாங்க நினைப்பவர்களுக்கு சிக்கல் தான், அதே போன்று அதிகமாக இறங்கினாலும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்களுக்கு சிக்கல் தான். அந்த வகையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
புதிய உச்சத்தில் தங்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1120 உயர்ந்து நகைப் பிரயர்களுக்கு ஷாக் கொடுத்தது. அந்த வரிசையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5ம், ஒரு சவரன் தங்கம் ரூ.40ம் அதிகரித்து விற்பனையாகின்றன. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.74,360ம், ஒரு கிராம் தங்கம் ரூ.9295க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெ
வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.123க்கு விற்பனை செய்யப்படுகிறது.