Today Gold Rate: போற போக்க பார்த்தா தங்கம் வாங்க முடியாது போல! சவரன் 55,000ஐ தாண்டியதால் அதிர்ச்சி!
Today Gold Rate in Chennai: தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,080-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
Tamilnadu Women
தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
Chennai Gold Rate
இந்நிலையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி சவரன் ரூ.47,800 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.
Gold Rate
அதனை தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தையும் அடைந்தது. பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. இதனால் அன்றைய தினம் காலை சவரன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் 2000 ரூபாய் குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.25 குறைந்து ரூ.6,825க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 20) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,340-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,720-ஆக விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.480 உயர்ந்து 55,000 தாண்டியதால் நகை வாங்குபவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
Today Silver Rate
வெள்ளி விலை 1.50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.97.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.