Today Gold Rate In Chennai: 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்!
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.53,360-க்கு விற்பனையான சவரன் இன்று ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
Gold Rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Chennai Gold Rate
இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,670க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 06) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,720-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,175-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,400-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.