- Home
- Business
- Today Gold Rate in Chennai : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!
Today Gold Rate in Chennai : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்த விலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.05 உயர்ந்து ரூ.5,500க்கு விற்பனையானது.
இன்றைய (ஆகஸ்ட் 16) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 05 குறைந்து ரூ.5,495ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,965ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,720ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.