MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சொத்து வரி செலுத்துபவரா நீங்க? அரசு சொன்ன குட் நியூஸ்..! வட்டியில் தள்ளுபடி பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

சொத்து வரி செலுத்துபவரா நீங்க? அரசு சொன்ன குட் நியூஸ்..! வட்டியில் தள்ளுபடி பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை எப்படி பெறலாம்? யாரெல்லாம் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 08 2026, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சொத்து வரி
Image Credit : AI

சொத்து வரி

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சொத்து வரி அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படும் நிலையில், மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடம் இருந்து சொத்து வரியை வசூல் செய்து மாநகராட்சி சாலைகளை அமைப்பது, தெரு விளக்குகளை பராமரிப்பது, பாதாள சாக்கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன.

சொத்து வரியில் 5% தள்ளுபடி

ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிப்பதால் நாம் அதிருப்தி அடைந்தாலும் சொத்து வரி செலுத்தும் சென்னைவாசிகளுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. ஒவ்வொரு அரை ஆண்டின் ஆரம்பத்திலும் அதாவது முதல் பாதியான ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும் மற்றும் இரண்டாம் பாதியான அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் உங்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும்.

24
தாமதமாக செலுத்தினால் அபராதம்
Image Credit : our own

தாமதமாக செலுத்தினால் அபராதம்

ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் சொத்து வரியை சரியாக செலுத்தினீர்கள் என்றால் சொத்து வரியில் 5% தள்ளுபடி பணத்தை உங்களால் சேமிக்க முடியும். ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல் அக்டோபர் 30ம் தேதிக்கு மேல் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி கிடைக்காது. இது மட்டுமின்றி தாமதமாக வரி செலுத்தினால் தாமதக் கட்டணமாக மாதம் 1% தனி வட்டியும் வசூலிக்கப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சென்னை மக்கள் அறியாத 3 விஷயங்கள்

சொத்து வரி செலுத்தும் சென்னை மக்கள் அறியாத 3 முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவது பலர் சொத்து வரி செலுத்தி விட்டு அதன் ரசீதை பெறுவதற்காக அலுவலகங்களுக்கு அலைகிறார்கள். இனிமேல் இது தேவையே இல்லை. ஏனெனில் நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்திய உடனே அதற்கான டிஜிட்டல் ரசீதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் (+91 94454 77205) மூலம் உங்கள் சொத்து வரி நிலுவை மற்றும் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

Related Articles

Related image1
ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மதுரை மேயரின் கணவரையும் தூக்கிய போலீஸ்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!
Related image2
சொத்து வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த சென்னை மாநகராட்சி! முழு விவரம்!
34
யாரெல்லாம் சொத்து வரி விலக்கு கோரலாம்
Image Credit : X

யாரெல்லாம் சொத்து வரி விலக்கு கோரலாம்

இரண்டாவது, உங்களின் கட்டிடம் நீண்ட நாட்களாக குறைந்தபட்சம் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் வாடகைக்கு விடப்படாமல் காலியாக இருந்தால் அல்லது அதில் நீங்கள் வசிக்காமல் பூட்டியே கிடந்தால், அதற்கு வரி விலக்கு அல்லது குறைப்பு கோர சட்டத்தில் இடம் இருக்கிறது. இதற்கு நீங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தொர்பு கொண்டால் நிவாரணம் பெற முடியும்.

இனி பெயர் மாற்றம் செய்ய அலைய வேண்டாம்

மூன்றாவது, இதற்கு முன்பு சொத்து வாங்கிய பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்ய நீண்ட நாட்கள் ஆகும். ஒவ்வொரு முறையும் மாநகராட்சி அலுவலக படிகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. ஆனால் இப்போது பதிவுத் துறையும், மாநகராட்சியும் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் பத்திரப் பதிவு செய்யும் போதே விவரங்கள் மாநகராட்சிக்குத் தானாகவே பகிரப்பட்டு, தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளது. ஆகையால் உங்களுக்கு இனிமேல் எந்த சிக்கலும் இல்லை.

44
சொத்து வரி தள்ளுபடி சென்னைக்கு மட்டும் தானா?
Image Credit : others

சொத்து வரி தள்ளுபடி சென்னைக்கு மட்டும் தானா?

சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால் சென்னைவாசிகளுக்கு மட்டும் தள்ளுபடியா? மற்றவர்களுக்கு இல்லையா? என நீங்கள் கேட்கலாம். சொத்து வரியில் 5% தள்ளுபடி சென்னை மட்டுமல்ல, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளுக்கும், தமிழகத்தின் நகராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சிகளில் வரி செலுத்துபவர்களும் இந்த தள்ளுபடியை பெறலாம். ஆனால் இந்த தள்ளுபடியை பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் சொத்து வரியை செலுத்தி இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சொத்து வரி
சென்னை மாநகராட்சி
வரி

Latest Videos
Recommended Stories
Recommended image1
PF பணத்தில் சிக்கலா..? உடனே சரிபார்க்க வேண்டிய 'Exit Date' ரகசியம்..!
Recommended image2
சமையலுக்கு இனி கவலை இல்லை! போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! எந்தெந்த காய்கள் என்ன விலை?
Recommended image3
Highest FD Rates: SBI, HDFC எல்லாம் ஓரமா போங்க..! இந்த பேங்க் 7.75% வட்டி தருது: வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்
Related Stories
Recommended image1
ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மதுரை மேயரின் கணவரையும் தூக்கிய போலீஸ்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!
Recommended image2
சொத்து வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த சென்னை மாநகராட்சி! முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved