MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பொங்கலுக்குள் வரும் குட் நியூஸ்.. கொண்டாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள்!

பொங்கலுக்குள் வரும் குட் நியூஸ்.. கொண்டாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள்!

ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 03 2025, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
7th Pay Commission DA Hike 2025

7th Pay Commission DA Hike 2025

மத்திய அரசு AICPI தரவுகளின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவைப் பொறுத்து அகவிலைப்படியை திருத்தியமைக்கிறது. மத்திய அரசு முதலில் ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் காலத்திற்கான குறியீட்டை மதிப்பாய்வு செய்து, பின்னர் 12 மாத சராசரி AICPI மதிப்பீட்டிற்குப் பிறகு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது.

25
DA Hike

DA Hike

அதன்படி, 2025 ஜனவரியில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் எதையும் அறிவிக்கவில்லை. அகவிலைப்படி/DR திருத்தம் 12 மாத அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அதிகரிப்பின் அடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு 12 மாத AICPI சராசரியின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது என்பதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

35
AICPI Index

AICPI Index

கடந்த ஆண்டு அக்டோபர் மாத தகவலின்படி, AICPI 144.5 ஆக உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத தரவுகளின்படி AICPI 145.3 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2025 இல் அகவிலைப்படி 56 சதவீதமாக உயரக்கூடும். அரசு ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி 53% ஆகும்.

45
Central Government Employee

Central Government Employee

இது கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்டது. விதிகளின்படி, பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 பெறும் ஊழியர்கள் கூடுதலாக ரூ.540 பெறுவார்கள். ரூ.2,50,000 ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி ரூ.7,500 ஆக இருக்கும்.

55
Dearness Allowance

Dearness Allowance

ஓய்வூதியதாரர்களுக்கு இந்தத் தொகை ரூ.270 முதல் ரூ.3,750 வரை இருக்கலாம். சமீபத்தில், மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எட்டாவது ஊதியக் குழு குறித்துப் பேசினார். அரசுக்கு இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.

யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
7வது ஊதியக் குழு
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..! ATM பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி..
Recommended image2
இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
Recommended image3
SBI-யின் லக்கி ஆஃபர்! மாசம் ரூ. 610 கட்டினா ரூ. 1 லட்சம் உங்க கையில.. மிஸ் பண்ணிடாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved