MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இன்று தங்கம் விலை ஏறியதா? இறங்கியதா? இதோ நிலவரம்!

இன்று தங்கம் விலை ஏறியதா? இறங்கியதா? இதோ நிலவரம்!

தங்கத்தின் விலை சமீபத்திய வாரங்களில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு விலை குறைந்த பிறகு, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 24 2024, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gold Rate

Gold Rate

மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர்.  குறிப்பாக தமிழக பெண்கள் அதிகளவிலேயே தங்கத்தை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

26
Gold Rate in Tamilnadu

Gold Rate in Tamilnadu

இதற்கு பல முக்கிய காரணங்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். மேலும் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சவரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

36
Today Gold Rate

Today Gold Rate

இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 31ம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அந்த வகையில் ஒரு சவரன் 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் இனி தங்கமே வாங்கு முடியாது போல என்ற நிலைக்கு நடுத்தர மக்கள் சென்றுவிட்டனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே யாரும் எதிர்பாராத விதமாக சரசரவென சரிய தொடங்கியது. குறிப்பாக 15 நாட்களில் 4200 ரூபாய் அளவிற்கு குறைந்தது. தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததால் மக்கள் நகைக்கடைகளில் குவிந்தனர். தங்கத்தின் தேவையும் அதிகரித்தது. 

46
Gold Rate in Chennai

Gold Rate in Chennai

தங்கத்தின் விலை குறைவிற்கு அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை முக்கிய காரணம் என கூறப்பட்டு வந்தது. இந்த விலையும்  மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது தங்கம் விலையானது தொடர்ந்து 7வது  நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.2,920 உயர்ந்துள்ளது. 

56
Gold News

Gold News

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனையானது. 

66
22 Carat Gold Rate

22 Carat Gold Rate

இன்றைய (நவம்பர் 24) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,300-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,805-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.62,440-ஆக விற்பனையாகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
தங்க நகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டேக் வாங்குறது ஈசி
Recommended image2
Agriculture: ஒரு வாழைத்தாரில் 300 காய்களா?! விவசாயிகளை கோடீஸ்வரனாக்கும் வாழை ரகங்கள்.!
Recommended image3
Gold Rate Today (ஜனவரி 03): சந்தோஷம் தந்த தங்கம் விலை.! இப்போது வாங்கலாமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved