DA Hike : அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ !!
அரசு ஊழியர்களின் சம்பளம் உயர போகிறது. அது யார் யாருக்கெல்லாம் பலனளிக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை (DA) மத்திய அரசு ஒப்புக்கொண்ட பார்முலாவின் கீழ் 3 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது டிஏ 42 சதவீதமாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு கிளை ஆகும்.
அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா இதுபற்றி கூறியபோது, “ஜூன் 2023க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. நாங்கள் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தக் கோருகிறோம். ஆனால் அரசாங்கம் அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரிக்கலாம். இது 45 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது.
நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கங்களுடன் டிஏவை உயர்த்துவதற்கான முன்மொழிவைத் தயாரித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். டிஏ உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். DA இல் கடைசியாக திருத்தம் மார்ச் 24, 2023 அன்று செய்யப்பட்டது மற்றும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!