MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தட்கல் டிக்கெட் உறுதி ஆகணுமா.. இந்த 2 டிப்ஸ் பின்பற்றுங்க.. ரயிலில் ஈசியா போகலாம்

தட்கல் டிக்கெட் உறுதி ஆகணுமா.. இந்த 2 டிப்ஸ் பின்பற்றுங்க.. ரயிலில் ஈசியா போகலாம்

அவசரப் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது சவாலானது, ஏனெனில் அவை நிமிடங்களில் தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட தட்கல் ரயில் டிக்கெட்டை உறுதியாக பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 25 2026, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தட்கல் டிக்கெட்
Image Credit : our own

தட்கல் டிக்கெட்

அவசரமாக பயணம் செய்ய வேண்டிய நேரங்களில் நினைவுக்கு வரும் முதல் தேர்வு ‘தட்கல்’ டிக்கெட் தான். இந்தியன் ரயில்வே வழங்கும் இந்த வசதி, பயணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே டிக்கெட் பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் திறந்த சில நிமிடங்களிலேயே முழுமையாக நிரம்பிவிடும். அதனால், முன்கூட்டியே சரியான தயாரிப்புடன் இருப்பது அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தட்கல் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
Image Credit : our own

தட்கல் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

தட்கல் பதிவு செய்யும்போது மிக முக்கியமானது வேகம். சில விநாடிகளின் தாமதமும் டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலையை உருவாக்கும். இதை தவிர்க்க, முன்கூட்டியே ஐஆர்சிடிசி கணக்கில் உள்நுழைந்து, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஆதார் சரிபார்ப்பு முடிந்திருக்க வேண்டும். பயணிகளின் பெயர், வயது போன்ற தகவல்களை ‘மாஸ்டர் லிஸ்ட்’ ஆக சேமித்து வைத்தால், பதிவு நேரத்தில் நேரம் மிச்சமாகும்.

35
ஐஆர்சிடிசி வாலெட் மூலம் கட்டணம்
Image Credit : our own

ஐஆர்சிடிசி வாலெட் மூலம் கட்டணம்

கட்டண முறையிலும் முன்னேற்பாடு அவசியம். யுபிஐ, ஐஆர்சிடிசி வாலெட், நெட் பேங்கிங் அல்லது கார்டு போன்றவற்றை முன்பே இணைத்து வைத்தால், கடைசி நேரத்தில் விவரங்களை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், கட்டணம் செலுத்தும் நேரம் குறைந்து, டிக்கெட் உறுதியாகும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக யுபிஐ மற்றும் ஐஆர்சிடிசி வாலெட் மூலம் கட்டணம் செலுத்துவது வேகமானதாக கருதப்படுகிறது.

45
தட்கல் டிக்கெட்டுகள்
Image Credit : our own

தட்கல் டிக்கெட்டுகள்

தட்கல் டிக்கெட்டுகள், பயணத்திற்கு முந்தைய நாளில் திறக்கப்படுகின்றன. ஏசி வகை டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் மற்றும் பிற வகைகள் 11 மணிக்கும் வெளியாகும். அதற்கு முன்பாகவே 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன் உள்நுழைந்து பக்கத்தை ரெடியாக வைத்திருக்க வேண்டும். சில விநாடிகள் தாமதமானாலும், டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.

55
ரயில் டிக்கெட் பதிவு டிப்ஸ்
Image Credit : our own

ரயில் டிக்கெட் பதிவு டிப்ஸ்

ஒரே ஒரு ரயிலையே நம்பாமல், அதே வழித்தடத்தில் செல்லும் 2 அல்லது 3 மாற்று ரயில்களையும் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருப்பது நல்லது. அதிக கோச்சுகள் உள்ள ரயில்களை தேர்வு செய்தால் வாய்ப்பு அதிகரிக்கும். சரியான திட்டமிடலும், வேகமான செயல்பாடும் இருந்தால் தட்கல் டிக்கெட் பெறுவது சாத்தியமே.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
ரயில்
இந்திய இரயில்வே
தட்கல் டிக்கெட்
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி பிறந்த குழந்தைகளுக்கும் மாதாந்திர பென்ஷன்: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்களில் அதிரடி மாற்றம்
Recommended image2
தமிழ்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா? அடுத்த 60 நாட்களில் என்ன மாற்றம் வரும்? இனி விலை குறையுமா?
Recommended image3
DMart Shopping Tips: மாதம் ரூ.5,000 மளிகைச் செலவா? டிமார்ட்டில் இப்படி வாங்கினால் ரூ.2,500 மிச்சமாகுமா? யாரும் சொல்லாத ஷாப்பிங் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் பெர்த் ஈஸியாக கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved