MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Loan Scheme: ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

Govt Loan Scheme: ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று சிறுதொழில் தொடங்கலாம்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 12 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
குறைந்த வட்டியில் கடன்
Image Credit : Asianet News

குறைந்த வட்டியில் கடன்

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் முதலீட்டு பற்றாக்குறை, வங்கிக் கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற காரணங்களால் பல நல்ல தொழில் யோசனைகள் ஆரம்ப நிலையிலேயே நின்றுவிடுகின்றன. இதுபோன்ற சூழலில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவாக தமிழக அரசு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில், வியாபாரம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு கடன் திட்டம்
Image Credit : Asianet News

பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு கடன் திட்டம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் தொழில், குழு தொழில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும், தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதுமாகும்.

Related Articles

Related image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Related image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
38
யார் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Asianet News

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தை தாண்டக்கூடாது. விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த கடன் உதவி வழங்கப்படும்.

48
ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன்
Image Credit : Gemini

ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன்

சிறு வணிகம், வர்த்தகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மரபு சார்ந்த தொழில்களை மேற்கொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.25 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியும், ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு 8 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது.

58
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை உதவி
Image Credit : Asianet News

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை உதவி

சுய உதவிக்குழு உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஒரு குழுவிற்கு மொத்தமாக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி கிடைக்கும். இந்த கடனை பெறுவதற்கு சுய உதவிக்குழு தொடங்கி குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் மகளிர் திட்ட அலுவலரால் தர மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்த குழுக்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படலாம்.

68
பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு சலுகை
Image Credit : Gemini AI

பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு சலுகை

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்காகவும் தனி கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம் இரண்டு மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பு உருவாகிறது.

78
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Asianet News

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அதேபோல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன. மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tabcedco.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

88
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்
Image Credit : Gemini AI

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள், தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுபவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த கடன் திட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும். குறைந்த வட்டி, அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் மற்றும் எளிய தகுதிகள் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். தொழில் வளர்ச்சிக்கான நிதி தேவைப்படுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
கடன்
முதலீடு
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Loan: 10 கிராம் தங்க செயினுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? வங்கிகளின் புதிய கணக்கு இதோ!
Recommended image2
Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!
Recommended image3
Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
Related Stories
Recommended image1
Business: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 பிஸ்னஸ் ஐடியாக்கள்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் ஜாலியா.!
Recommended image2
Zero Investment Business: முதலீடு இல்லாமல் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! வீட்டிலிருந்தே வருமானம் தரும் 3 டிஜிட்டல் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved