Loan: கடன் வாங்க போறீங்களா? அதற்குமுன் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!
கடன் வாங்குவது இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல் கடன் வாங்கினால், கடன் சுமையில் சிக்கிக் கொள்ள நேரிடும். கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது.
114

Image Credit : AI
கடன் வாங்கும் முன் யோசிப்போம்
இன்று நம் வாழ்க்கையில் கல்வி, வீடு, வியாபாரம், மருத்துவம் என்று பல காரணங்களால் கடன் தேவைப்படும். ஆனால் யோசிக்காமல் கடன் வாங்கினால் கடன் வலையில் சிக்கி நிறைய சிரமப்பட வேண்டிய நிலை வரும். அதை தவிர்க்க சிலவற்றை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
214
Image Credit : Google
கடன் எதற்காக?
- கடனை மிக அவசியம் இருந்தாலே எடுங்கள்.
- அத்தியாவசிய செலவுக்கு (கல்வி, வீடு) மட்டும் கடன் எடுங்கள்.
- ஆசையால் செலவு செய்ய கடன் வேண்டாம்.
314
Image Credit : Google
கடனின் வகை தெரிந்து கொள்ளுங்கள்
- அடமானம் வைத்து (நகை, வீடு) வாங்கும் கடன் வட்டி குறைவாக இருக்கும்.
- அடமானம் இல்லாத கடனுக்கு வட்டி அதிகம்.
- எந்த வகை உங்களுக்கு பொருத்தமோ அதில் எடுத்துக்கொள்ளுங்கள்.
414
Image Credit : Google
வட்டி விகிதம் கவனியுங்கள்
எல்லா நிறுவனங்களின் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்காது.
சில நிறுவனங்கள் குறைவான வட்டியில் கடன் தரும்.
ஒப்பிடுங்கள், பேசுங்கள், சிறந்த வட்டி கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
514
Image Credit : Asianet News
திருப்பிச் செலுத்தும் காலம்
- எத்தனை மாதத்தில் கடனை அடைப்பீர்கள் என்று திட்டமிடுங்கள்.
- மாத வருமானம், செலவுகள் பார்த்து தவணையை நிர்ணயிக்க வேண்டும்.
614
Image Credit : stockPhoto
கடன் கட்டணங்கள்
- கடன் பெறும்போது “பரிசீலனைக் கட்டணம்”, “சட்டக் கட்டணம்” போன்றவை வசூலிப்பார்கள்.
- அவை தேவையா, எவ்வளவு என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
- அதிக கட்டணம் கேட்டால் பேசிப் பாருங்கள்.
714
Image Credit : Google
கிரெடிட் ஸ்கோர்
- உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நல்லது என்றால் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.
- குறைந்த ஸ்கோர் இருந்தால் வட்டி அதிகமாகும்.
- பழைய கடன்களை நேரத்தில் அடைத்தால் ஸ்கோர் மேம்படும்.
814
Image Credit : Getty
நம்பகமான நிறுவனம்
- அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கி, நிதி நிறுவனம், ஹௌசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து கடன் எடுங்கள்.
- மொபைல் ஆப்புகள், தனிப்பட்ட நபர்கள் மூலம் கடன் வாங்க வேண்டாம்.
914
Image Credit : Google
முன்கூட்டியே அடைக்க வசதி
- சில நிறுவனங்கள் விரைவில் கடனை அடைத்தால் அபராதம் வசூலிக்கலாம்.
- முன்கூட்டியே அடைத்தால் எந்த விதிகள், கட்டணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1014
Image Credit : Google
வரிச் சலுகைகள்
- வீட்டுக் கடனுக்கு அசலுக்கு, வட்டிக்கு வருமான வரியில் சலுகை கிடைக்கும்.
- கல்விக் கடனுக்கு முழு வட்டிக்கும் சலுகை கிடைக்கும்.
- வரிச் சலுகைகள் எப்படி பயன்படும் என்று கணக்காளரிடம் கேளுங்கள்.
1114
Image Credit : Google
வருமானத்தில் கடனின் அளவு
உங்கள் வருமானத்தில் 30% க்கும் மேல் கடன் தவணை போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிகமான தவணை உங்கள் வாழ்க்கைச் செலவுகளை கடினமாக்கும்.
1214
Image Credit : Google
தவணை செலுத்த முடியாத நிலை
- வேலை போய் போனால், குடும்ப சிக்கல் ஏற்பட்டால் தவணை கட்ட முடியாமல் போகலாம்.
- அப்போது “ஹாலிடே பீரியட்” கேட்டு தவணையை தள்ளிப் போகச் சொல்லலாம்.
- நிறுவனம் என்ன சலுகை தரும் என்று முன்பே தெரிந்து கொள்ளுங்கள்.
1314
Image Credit : Google
நல்ல கடன் - கெட்ட கடன்
- கல்வி, வீடு, தொழில் வளர்ச்சிக்காக கடன் எடுப்பது நல்லது.
- ஆசையால் ஆடம்பர பொருட்கள், சுற்றுலா செலவுக்கு கடன் எடுக்க வேண்டாம்.
- அவ்வாறு எடுத்தால் அதுதான் “கெட்ட கடன்”.
1414
Image Credit : Google
எந்தக் கடனும் திட்டமிடாமல் எடுக்க வேண்டாம்
- மாத செலவினத்தை நினைவில் வையுங்கள்.
- அவசர நிதி சேமிப்பு வைத்துக் கொள்ளுங்கள்.
- சந்தேகங்கள் இருந்தால் நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
Latest Videos