SIP vs RD: 5 ஆண்டுகள் ரூ.5000 முதலீடு செய்தால் அதிக வருமானம் எங்கே கிடைக்கும்?
5 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.5000 முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்? RD கணக்கை எந்த வங்கி அல்லது போஸ்ட் ஆபிசிலும் திறக்கலாம். 5 ஆண்டு ஆர்டிக்கு 6.7 சதவீத வருடாந்திர வட்டி அளிக்கப்படுகிறது.
SIP vs RD
அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறிய தொகையை முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா? RD மற்றும் SIP இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம். இரண்டுமே வெவ்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகள். இந்த இரண்டு திட்டங்களிலும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
Rs 5,000 investment for 5 years
RD முதலீட்டில் நிலையான வருமானம் கிடைக்கும். அதில் எந்த ஆபத்தும் இல்லை. SIP முதலீட்டில் கிடைக்கும் வருமானம் ஒருபோதும் நிலையானது அல்ல. அதில் பங்குச்சந்தை அபாயமும் உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு 5000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
5 Year Recurring Deposit
நீங்கள் RD கணக்கைத் தொடங்க விரும்பினால், வங்கிலோ தபால் நிலையத்திலோ RD கணக்கைத் ஆரம்பிக்கலாம். போஸ்ட் ஆபிசில் 5 ஆண்டு RD க்கு 6.7 சதவீத வருடாந்திர வட்டி அளிக்கப்படுகிறது. தபால் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் RD செய்தால், 5 ஆண்டுகளில் மொத்த முதலீடு 3,00,000 ரூபாயாக இருக்கும். 6.7 சதவீத வட்டி விகிதத்தின்படி, முதிர்வுக் காலத்தில் மொத்தத் தொகையாக ரூ.3,56,830 கிடைக்கும். இதில் ரூ.56,830 வட்டியும் அடங்கும்.
5 Year SIP Calculator
நீங்கள் 5000 ரூபாயை SIP முறையில் முதலீடு செய்வதாக இருந்தாலும், 5 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ. 3,00,000 ஆக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 12 சதவிகிதம் வருமானம் ஈட்டினால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக 4,12,432 ரூபாய் கிடைக்கும். இதில் வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1,12,432.
Higher returns for 5 year investment
பாதுகாப்பான ரெக்கரிங் டெபாசிட்டில் செலுத்தும் ரூ.3 லட்சத்துக்கு ரூ.56,830 தான் வட்டி கிடைக்கிறது. இதுவே, SIP முதலீட்டில் ரிஸ்க் இருந்தாலும், 3 லட்ச ரூபாய் பணத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வருமானம் கிடைக்கிறது. இந்தக் கணக்கீட்டின்படி, SIP முதலீட்டில் கிடைக்கும் லாபம் கிட்டத்தட்ட ரெக்கரிங் டெபாசிட்டில் கிடைப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்.