சிம்பிள் SIP முதலீடு! தினமும் 100 ரூபாய் சேமித்தால் கோடி கோடியா சம்பாதிக்கலாம்!
தினமும் 100 ரூபாய் சேமித்து மியூச்சுவல் ஃபண்ட் SIP இல் முதலீடு செய்தால், அடுத்த 10, 20, 30 மற்றும் 40 ஆண்டுகளில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதை SIP கால்குலேட்டரின் உதவியுடன் மதிப்பிடலாம்.
SIP investment
நீண்ட காலத்திற்கு உங்கள் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறீர்களா? SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டத்தில் தினசரி 100 ரூபாய்க்கும் குறைவாக தொகையைச் சேமித்து கோடிக்கணக்கான நிதியைத் திரட்டலாம். நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்தாலும் சரி அல்லது தொழில் செய்பவராக இருந்தாலும் சரி SIP முதலீடு எதிர்காலத்திற்கான வலுவான நிதி அடித்தளத்தைக் கொடுக்கும்.
Save 100 rupees daily
தினமும் 100 ரூபாய்: இன்றைய காலகட்டத்தில், SIP ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாக மாறியுள்ளது. நீங்கள் வழக்கமாக தினமும் 100 ரூபாய் சேமித்து மியூச்சுவல் ஃபண்ட் SIP இல் முதலீடு செய்தால், அடுத்த 10, 20, 30 மற்றும் 40 ஆண்டுகளில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதை SIP கால்குலேட்டரின் உதவியுடன் மதிப்பிடலாம்.
SIP investment for 10 years
10 வருட SIP முதலீடு: தினமும் ₹100 சேமித்தால், மாத இறுதியில் ரூ.3000 SIP இல் முதலீடு செய்யப்படும். நீங்கள் சராசரியாக 12% ஆண்டு வருமானம் பெற்றால், 10 ஆண்டுகளில் உங்கள் நிதி ரூ.6,97,017 ஆக இருக்கும். இதில், முதலீட்டுத் தொகை ரூ.3,60,000 ஆகவும், மூலதன லாபம் ரூ.3,37,017 ஆகவும் இருக்கும்.
SIP investment for 20 years
20 வருட SIP முதலீடு: தினமும் ரூ.100 சேமித்து, 20 ஆண்டுகளுக்கு SIP முதலீடு செய்தால், மொத்தம் ரூ.₹7,20,000 முதலீடு செய்து ரூ.29,97,444 நிதியை உருவாக்கலாம். இதில் மூலதன ஆதாயம் ரூ.22,77,444 ஆக இருக்கும்.
SIP investment for 30 years
30 வருட SIP முதலீடு: 30 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.100 சேமித்து SIP முதலீடு செய்வதன் மூலம் ரூ.10,80,000 முதலீட்டின் மூலம் ரூ.1,05,89,741 நிதியை உருவாக்கலாம். இதில் மூலதன ஆதாயம் ரூ.95,09,741 ஆக இருக்கும்.
SIP investment for 40 years
40 வருட SIP முதலீடு: 40 வருடங்கள் நாள்தோறும் 100 ரூபாய் சேர்த்து SIP முதலீடு செய்தால் ரூ.14,40,000 முதலீட்டுக்கு மொத்தம் ரூ.3,56,47,261 நிதியைத் தயார் செய்யலாம். இதில் மூலதன ஆதாயம் ரூ.3,56,47,261 ஆக இருக்கும்.
SIP Calculator
20 வயதில் ரூ.3000 மாதாந்திர SIP முதலீட்டை ஆரம்பித்தால், 60 வயதில் ரூ.3.5 கோடி உங்களிடம் இருக்கும். SIP நீண்ட காலத்தில் ஒரு பெரிய தொகையை உருவாக்குவதற்கு ஏற்ற வழியாக உள்ளது. ஆனால் எப்போதும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எனவே முதலீட்டாளர்கள் இதில் உள்ள ரிஸ்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.