வட்டியே ரூ.12.3 லட்சம் வரும்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு பண்ணுங்க!
போஸ்ட் ஆபிஸ் சிறுசேமிப்புத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு நல்ல வட்டி வழங்கப்படுகிறது. அதில் 5 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால், ரூ.12,30,000 வரை வட்டி மட்டும் கிடைக்கும்.
Senior Citizens Savings Scheme
மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை ஓய்வூதிய நிதியாகப் பெறுகின்றனர். இந்தப் பணத்தில் ரிஸ்க் எடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். அதனால்தான் பெரும்பாலான மூத்த குடிமக்கள் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அதன் மூலம் உத்தரவாதமான வட்டியும் கிடைக்கும்.
Post Office Savings Scheme
மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பை 5 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆபிஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) டெபாசிட் செய்யலாம். பணம் 100% பாதுகாப்பாக இருக்கும். மேலும் அதற்கான சிறந்த வட்டி விகிதங்களையும் பெற முடியும். தற்போது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
SCSS Scheme age limit
மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1000. இந்தத் திட்டத்தில், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு காலாண்டு தோறும் வட்டி செலுத்தப்படுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டம் முதிர்ச்சியடையும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்ற சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
SCSS Scheme Interest
போஸ்ட் ஆபிசில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி மூலம் ரூ.12.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கு இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். ரூ.30 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி ரூ.12,30,000 ஆக இருக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.42,30,000 கிடைக்கும்.
Income Tax benefits
5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் பெற விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். கணக்கு முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள் நீட்டிக்க வேண்டும். நீட்டிக்கப்பட்ட கணக்கிற்கு முதிர்வு தேதியில் உள்ள வட்டி விகிதம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கும் பெறலாம்.