MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வேலைக்கே செல்லாமல் மாதம் ரூ.20000 வருமானம் வேண்டுமா? ஓய்வுக்குப் பின் ஜாலியாக வாழ சூப்பர் திட்டம்.!

வேலைக்கே செல்லாமல் மாதம் ரூ.20000 வருமானம் வேண்டுமா? ஓய்வுக்குப் பின் ஜாலியாக வாழ சூப்பர் திட்டம்.!

SCSS Scheme in Tamil : ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்திற்காகப் பலர் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுகின்றனர். இதில், அரசு உத்தரவாதத்துடன் செயல்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) தனித்து நிற்கிறது.  

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 15 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
Image Credit : Getty

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது முதியோருக்கான ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். இதில் சேர சில தகுதிகள் உள்ளன. அவை:

  • 60 வயது பூர்த்தியடைந்தவர்கள்.
  • 55-60 வயதுக்குள் VRS பெற்ற அரசு ஊழியர்கள்.
  • 50-60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினர்.
  • தனிநபர் அல்லது கணவன்-மனைவி கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வட்டி விகிதம் என்ன?
Image Credit : Getty

வட்டி விகிதம் என்ன?

தற்போது இத்திட்டத்தின் ஆண்டு வட்டி விகிதம் 8.2%. வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. அதிகபட்சம் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், மாதம் சுமார் ரூ.20,500 வருமானம் பெறலாம். இது வங்கி வைப்பு நிதிகளை விட அதிகம். டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.30 லட்சம். முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

35
வரிச் சலுகைகள்
Image Credit : Post Office\Twitter

வரிச் சலுகைகள்

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. ஆனால், வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படும். குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் TDS பிடிக்கப்படும். எனவே, வரி திட்டமிடல் அவசியம்.

45
தேவையான ஆவணங்கள்
Image Credit : Getty

தேவையான ஆவணங்கள்

அருகிலுள்ள தபால் நிலையத்தில் SCSS கணக்கைத் திறக்கலாம். தேவையான ஆவணங்கள்: ஆதார், பான், வயதுச் சான்று, ஓய்வூதியச் சான்றிதழ். 1 ஆண்டுக்குள் கணக்கை மூடினால் வட்டி இல்லை. 1-2 ஆண்டுகளில் 1.5% மற்றும் 2-5 ஆண்டுகளில் 1% அபராதம் விதிக்கப்படும்.

55
நம்பகத்தனமான சேமிப்பு திட்டம்
Image Credit : Google

நம்பகத்தனமான சேமிப்பு திட்டம்

மொத்தத்தில், ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானம் விரும்பும் முதியவர்களுக்கு SCSS ஒரு சிறந்த வழி. அரசு பாதுகாப்பு, கவர்ச்சிகரமான வட்டி மற்றும் வரிச் சலுகைகள் இத்திட்டத்தை நம்பகமான தேர்வாக மாற்றுகின்றன. மாதச் செலவுகளுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். எனவே 60 வயது பூர்த்தியானவர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையம் அல்லது வங்கிக் கிளையை அணுகி இப்போதே சேமிப்பை தொடங்குங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஞ்சல் அலுவலகம்
தபால் அலுவலகத் திட்டம்
தபால் அலுவலகம்
அரசு திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays : நவம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் இதோ! மாநில வாரியான விடுமுறை பட்டியல்!
Recommended image2
Money : மாதம் ரூ.15,000 SIP! 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்க முடியுமா? 15-15-15 விதி இதோ!
Recommended image3
Flight Tticket Price: பயணிகளுக்கு ஜாக்பாட்.. விமானக் கட்டணம் குறைகிறது.. VAT அதிரடி குறைப்பு!
Related Stories
Recommended image1
ரூ.1000 அனுப்பினால் யுபிஐ கட்டணமா? இலவசம் இல்லையா? டிஜிட்டல் பணத்தில் புதிய திருப்பம்!
Recommended image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்.. மார்ச் 16 வரை முக்கிய வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved