MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 10 ஆயிரம் முதலீடு செய்தால் 43 லட்சம்! SBI மியூச்சுவல் ஃபண்டில் லாபம் ஈட்டுவது எப்படி?

10 ஆயிரம் முதலீடு செய்தால் 43 லட்சம்! SBI மியூச்சுவல் ஃபண்டில் லாபம் ஈட்டுவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) துறையின் சொத்து அளவு மாதந்தோறும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 வருட வருமானத்தின் அடிப்படையில் ஈக்விட்டி (Equity) பிரிவில் டாப் 5 எஸ்பிஐ (SBI) மியூச்சுவல் ஃபண்டுகளை இத்தொகுப்பில் காணலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Nov 10 2024, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SBI Mutual Funds Investment

SBI Mutual Funds Investment

மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து அளவு மாதந்தோறும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) சமீபத்திய அறிக்கை உறுதிசெய்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரும்பாலான புதிய முதலீடுகள் ஈக்விட்டி திட்டங்களில் வருகின்றன.

தனிப்பட்ட முதலீட்டாளர்களில் 87% பேர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பங்கு சார்ந்த திட்டங்களின் விகிதாசார பங்கு செப்டம்பர் 2023 இல் 54.1% ஆக இருந்தது. இது 2024 செப்டம்பரில் 61% ஆக உள்ளது. கடந்த 10 வருட வருமானத்தின் அடிப்படையில் ஈக்விட்டி பிரிவில் டாப் 5 எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுகளை இத்தொகுப்பில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
SBI Small Cap Fund

SBI Small Cap Fund

இந்த ஃபண்டில் NAV - ரூ 203.88. 30-செப். 2024 வரை நிதி அளவு ரூ. 34,217 கோடி. செலவு விகிதம் 0.66%. 10 ஆண்டு வருமானம் 23.50%. 10 ஆண்டு SIP வருமானம் - 23.68%.

இந்த வருடாந்திர வருமான விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் தொடங்கி இருந்தால் இப்போது ரூ.42.85 லட்சமாக மாறியிருக்கும்.

36
SBI Consumption Opportunities Fund

SBI Consumption Opportunities Fund

இந்த ஃபண்டில் NAV ரூ.370.57. நிதி அளவு ரூ 3,101 கோடி. செலவு விகிதம் 0.9%. 10 ஆண்டு வருமானம் 18.13%. 10 ஆண்டு SIP வருமானம் 20.64%.

இந்த விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ. 10,000 முதலீடு செய்யத் தொடங்கி இருந்தால் இப்போது ரூ.36.29 லட்சமாக மாறியிருக்கும்.

46
SBI Magnum Midcap Fund

SBI Magnum Midcap Fund

இந்த ஃபண்டில் NAV ரூ 261.64. நிதி அளவு ரூ 22,338 கோடி. செலவு விகிதம் : 0.77%. 10 ஆண்டு வருமானம் 18.01%. 10 ஆண்டு SIP வருமானம் 20.2%.

இந்த வளர்ச்சி விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீட்டைத் தொடங்கியிருந்தால் இப்போது ரூ.35.42 லட்சமாக மாறியிருக்கும்.

56
SBI Technology Opportunities Fund

SBI Technology Opportunities Fund

இந்த ஃபண்டில் NAV ரூ 236.23. நிதி அளவு ரூ 4,435 கோடி. செலவு விகிதம் 0.84%. 10 ஆண்டு வருமானம் 17.75%. 10 ஆண்டு SIP வருமானம் 21.83%.

இந்த விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தால் இப்போது ரூ.38.73 லட்சமாக மாறியிருக்கும்.

66
SBI Infrastructure Fund

SBI Infrastructure Fund

இந்த ஃபண்டில் NAV ரூ 54.84. நிதி அளவு ரூ.5071 கோடி. செலவு விகிதம் 0.95%. 10 ஆண்டு வருமானம் 17.70%. 10 ஆண்டு SIP வருமானம் 21.77%.

இந்த வருடாந்திர வருமான விகிதத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 இல் தொடங்கப்பட்ட எஸ்ஐபி முதலீடு இப்போது ரூ.38.61 லட்சமாக மாறியிருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முதலீடு
மியூச்சுவல் ஃபண்டுகள்
பாரத ஸ்டேட் வங்கி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved