MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.1 பங்குக்கு ரூ.17.35 லாபம்.. எஸ்பிஐ அறிவித்த அதிரடி டிவிடெண்ட்.. யாருக்கு கிடைக்கும்?

ரூ.1 பங்குக்கு ரூ.17.35 லாபம்.. எஸ்பிஐ அறிவித்த அதிரடி டிவிடெண்ட்.. யாருக்கு கிடைக்கும்?

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2025–26 நிதியாண்டிற்காக ஒரு பங்குக்கு ரூ.17.35 இறுதி டிவிடெண்ட் அறிவித்து முதலீட்டாளர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 08 2026, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எஸ்பிஐ டிவிடெண்ட்
Image Credit : Asianet News

எஸ்பிஐ டிவிடெண்ட்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தனது பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025–26 நிதியாண்டிற்காக, ஒரு பங்குக்கு ரூ.17.35 இறுதி டிவிடெண்ட் வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரெக்கார்டு தேதி
Image Credit : Asianet News

ரெக்கார்டு தேதி

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியின் மத்திய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விதிகளுக்கு இணங்க இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வங்கியின் வலுவான நிதிநிலை காரணமாக, லாபத்தின் ஒரு பகுதியை பங்குதாரர்களுடன் பகிர முடிவு செய்துள்ளது.

35
பங்கு லாபம்
Image Credit : stockPhoto

பங்கு லாபம்

எஸ்பிஐ பங்கின் முக மதிப்பு ரூ.1 மட்டுமே. இந்த நிலையில், ரூ.17.35 டிவிடெண்ட் அறிவிப்பு என்பது 1,735% வருமானத்தைக் குறிக்கிறது. இது வங்கியின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பெரிய பலனாக அமையும்.

45
இந்திய வங்கி பங்குகள்
Image Credit : Asianet News

இந்திய வங்கி பங்குகள்

இந்த டிவிடெண்ட் பெறுவதற்கான ‘ரெக்கார்டு தேதி’ 2026 மே 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் டிமேட் கணக்கில் எஸ்பிஐ பங்குகள் வைத்திருப்பவர்கள் இந்த டிவிடெண்டுக்கு தகுதி பெறுவார்கள். தகுதியான முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில், 2026 ஜூன் 4ஆம் தேதி நேரடியாகத் தொகை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

55
எஸ்பிஐ முதலீடு
Image Credit : stockPhoto

எஸ்பிஐ முதலீடு

ஆனால், இந்த அறிவிப்புடன் கூட பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்கு விலை சற்று சரிவைக் கண்டது. மார்ச் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாததால், பங்கு விலையில் 3%க்கும் அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டது. இருந்தாலும், இந்த பெரிய டிவிடெண்ட் அறிவிப்பு நீண்டகால நம்பிக்கையை வலுப்படுத்தி, எஸ்பிஐ மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக்கியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
முதலீடு
பணம்
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Gas Loan: கையில் பணம் இல்லையா? கேஸ் சிலிண்டர் வாங்க ரூ.600 கடன்.. வாரம் ரூ.100 கட்டினால் போதும்
Recommended image2
October Bank Holidays: அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. இந்த தேதிகளை மறந்துடாதீங்க!
Recommended image3
Train Tickets: ரயில் டிக்கெட் எடுக்க இனி ஸ்டேஷனுக்கு போக வேண்டாம்.. போஸ்ட் ஆபீஸிலேயே புக் செய்யலாம்!
Related Stories
Recommended image1
Tata : டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்... பாஸ்ட் சார்ஜிங், அதிக ரேஞ்ச் என எண்ணற்ற அம்சங்களுடன் வருது...!
Recommended image2
குபேர யோகம்: கடன் போகுது.. பணம் கொட்டுது.. இந்த ராசிகளுக்கு மே மாதம் ஜாக்பாட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved