MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PF கணக்கில் 50,000 ரூபாய் போனஸ்! EPFO வழங்கும் பணம் யாருக்குக் கிடைக்கும்?

PF கணக்கில் 50,000 ரூபாய் போனஸ்! EPFO வழங்கும் பணம் யாருக்குக் கிடைக்கும்?

பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பணியாளர் டெபாசிட் செய்த அதே தொகையை பணிபுரியும் நிறுவனமும் டெபாசிட் செய்ய வேண்டும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Nov 26 2024, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
EPFO rules

EPFO rules

பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். பணியாளர் டெபாசிட் செய்த அதே தொகையை அவர் பணிபுரியும் நிறுவனமும் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த பணம் பணியாளரின் ஓய்வுக்குப் பிறகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நீங்கள் விரும்பினால், ஓய்வுபெற்ற பிறகு அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்த தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் தொடர்பாக சில விதிகள் உள்ளன. இது பற்றி பலருக்கும் தெரியாது. உதாரணமாக, நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்று EPFO ​​விதி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
EPFO and CBDT

EPFO and CBDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்படி, நீங்கள் சில நிபந்தனைகளைப் பின்பற்றினால், 50 ஆயிரம் ரூபாய் போனஸ் நேரடியாக உங்கள் கணக்கில் வழங்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) EPF சந்தாதாரர்களுக்கு வெகுமதி அளிக்க லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட் (Loyalty cum Life Benefit) முறையைப் பரிந்துரைத்தது. இந்த விதியின் கீழ், பணியாளர்கள் ரூ. 50,000 வரை நேரடி பலனைப் பெற முடியும்.

36
EPFO Bonus

EPFO Bonus

இந்த போனஸின் பலன் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்கள் கணக்குகளில் பங்களிப்பவர்களுக்குக் கிடைக்கும். அதாவது, 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒரே பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் சந்தாதாரர்கள், இந்த போனஸ் தொகையைப் பெறுகிறார்கள். அதாவது வழக்கமான டெபாசிட் மூலம் கிடைக்கும் பலனுடன் ரூ.50,000 கூடுதல் பலன் கிடைக்கும்.

46
EPF Account

EPF Account

EPFO ​​சந்தாதாரர்கள் தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும். வேலை மாறினாலும் ஒரே பி.எஃப். கணக்கில் தொடர்ந்து பங்களிப்பைத் தொடர வேண்டும். ஒரே கணக்கில் 20 ஆண்டுகள் தொடர்ந்து பங்களித்த ஊழியர்கள், போனஸ் பலன்களைப் பெற தகுதி அடைவார்கள். ஏற்கனவே இருக்கும் EPF கணக்கில் தொடர்ந்து பங்களிப்பைச் செலுத்த முந்தைய மற்றும் தற்போதைய நிறுவனங்களில் தெரிவிப்பது முக்கியம்.

56
EPFO Bonus amount

EPFO Bonus amount

லாயல்டி-கம்-லைஃப் பலன்களின் கீழ், ரூ.5000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 போனஸ் பெறலாம். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 போனஸ் கிடைக்கும். அடிப்படை சம்பளம் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு 50,000 ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும்.

66
EPFO interest rate

EPFO interest rate

நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. பணிக்காலத்துக்குப் பிறகு பணிளாயர்களின் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. தற்போது, ​​EPFO ​​2023-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. நீங்கள் EPFO ​​நிபந்தனையைப் பூர்த்தி செய்து, பி.எஃப். கணக்கில் ரூ.50,000 போனஸ் தொகையும் ஈட்டலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image2
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Recommended image3
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved