MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புதிய சாதனை படைத்த UPI! மார்ச்சில் ரூ.24.8 லட்சம் கோடி பரிவர்த்தனை!

புதிய சாதனை படைத்த UPI! மார்ச்சில் ரூ.24.8 லட்சம் கோடி பரிவர்த்தனை!

UPI மார்ச் மாதத்தில் ரூ.24.8 லட்சம் கோடி மதிப்புள்ள 1,830 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 36% வளர்ச்சியைக் குறிக்கிறது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையும் 25% அதிகரித்துள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Apr 02 2025, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
UPI transactions

UPI transactions

UPI தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. மார்ச் மாதத்தில், UPI முறையில் ரூ.24.8 லட்சம் கோடி மதிப்புள்ள 1,830 கோடி பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டன. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் 36% அதிகரிப்பைக் குறிக்கிறது. பரிவர்த்தனைகளில் பண மதிப்பும் 25% உயர்ந்துள்ளது.

25
UPI records

UPI records

பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.22 லட்சம் கோடி மதிப்புள்ள 1,611 கோடி பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது சராசரியாக, UPI மூலம் தினமும் 59 கோடி பரிவர்த்தனைகள் நடக்கின்றன.. ஒவ்வொரு நொடிக்கும் 6,800 பரிவர்த்தனைகளை UPI கையாளுகிறது, தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.79,910 கோடி.

35
UPI payments

UPI payments

இதுவரை, ஒரு மாதத்திற்கான அதிகபட்ச பரிவர்த்தனை மதிப்பு அக்டோபர் 2024 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.23.5 லட்சம் கோடிக்கு UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பண்டிகை காலமாக இருந்தும் ஆன்லைன் விற்பனை அதிகமாக இருந்தும் எண்ணிக்கை உயர முக்கியக் காரணமாக அமைந்தன.

45
UPI latest update

UPI latest update

பரிவர்த்தனை அளவின் முந்தைய உச்சம் ஜனவரி 2025 இல் இருந்தது, இது 1,700 கோடி பரிவர்த்தனைகளைக் கண்டது. 2025 நிதியாண்டின் முழு காலத்திற்கும், UPI பரிவர்த்தனைகள் மொத்தம் 18,586 கோடியாக இருந்தன, இதன் மதிப்பு ரூ.260.5 லட்சம் கோடி.

55
UPI transaction history

UPI transaction history

2024 நிதியாண்டில் 13,113 கோடி பரிவர்த்தனைகளில் ரூ.200 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிமாறப்பட்டது. அத்துடன் ஒப்பிடும்போது 2025 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணமுடிகிறது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 41% மற்றும் அவற்றின் மதிப்பு 30% அதிகரித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
UPI கொடுப்பனவு
UPI பரிவர்த்தனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved