ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்கும் அவர் மூன்றாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.

Revenue Secretary Sanjay Malhotra
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்கும் அவர் மூன்றாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New RBI Governor Sanjay Malhotra
சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1990-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கான்பூரில் ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
Sanjay Malhotra career and experience
33 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் போன்ற பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிதி சேவைகள் துறை செயலாளராக இருந்தார்.
Shaktikanta Das
மல்ஹோத்ரா மாநில மற்றும் மத்திய அரசில் நிதி மற்றும் வரி விதிப்பில் பரந்த அனுபவம் பெற்றவர் என வருவாய்த் துறை இணையதளம் கூறுகிறது. நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கைகளை வகுப்பதில் மல்ஹோத்ரா முக்கியப் பங்காற்றியுள்ளார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Reserve Bank of India
சக்திகாந்த தாஸுக்குப் பதிலாக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சக்தகாந்த தாஸின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது. ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக 2018ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். அவருக்கு முன் இருந்த உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சக்திகாந்த தாஸ் தனது மூன்று ஆண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு அவருக்கு மீண்டும் ஒருமுறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.