ரிடையர் ஆனதும் மாதம் ரூ.2.5 லட்சம் பென்ஷன் கிடைக்கும்! பக்கா பிளான் இதோ!!
ஓய்வூதிய திட்டமிடலுக்கான சிறந்த வழி NPS எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம். இதில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் ஓய்வுக்குப் பின் மாதம் ரூ.2.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
NPS
ஓய்வூதியம் குறித்து இளமையிலேயே சிந்திக்க வேண்டும். எவ்வளவு பணம் தேவைப்படுகிறது, பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்குக் மாதாந்திர முதலீடு குறைவாக இருக்கும். அதே சமயத்தில் அதிக வருமானமும் கிடைக்கும்.
Rs 5 Crore in NPS
ஓய்வூதியத் திட்டமிடலுக்கான சிறந்த வழி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதுதான். இத்திட்டத்தில் ஓய்வு பெறும் வரை சிறிது தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து ரூ. 5 கோடியைத் திரட்டலாம். இதிலிருந்து ஓய்வுக்குப் பின் மாதம் 2.5 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
NPS Formula
முதலில், இந்த ஃபார்முலா அனைவருக்கும் பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில் வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய இளைஞர்களுக்கு மட்டுமே இந்த ஃபார்முலா பொருந்தும். ஓய்வு பெறும்போது, அதாவது 60 வயதில் 5 கோடி ரூபாய் சேமிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். 25 வயதில் உங்களுக்கு வேலை கிடைத்தால், சம்பளத்தில் இருந்து தினமும் 442 ரூபாய் சேமிக்க வேண்டும். இப்படிய ரிடையர் ஆகும் வரை முதலீடு செய்தால் எளிதாக ரூ.5 கோடியைப் பெறலாம்.
Retirement Planning
ஒவ்வொரு நாளும் ரூ.442 சேமித்தால், மாதம்தோறும் சுமார் ரூ.13,260 தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இப்படி 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 35 ஆண்டுகள், அதாவது 60 வயது வரை, முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டுக்கு சராசரியாக 10 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த வழியில், கூட்டு வட்டியின் பலனுடன் 60 வயதாகும்போது உங்களிடம் ரூ.5.12 கோடி இருக்கும்.
35 years
மாதம் ரூ.13,260 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.56,70,200 ஆக இருக்கும். 35 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த ரூ.56.70 லட்சம் பணத்துக்கு கூட்டி வட்டியின் மூலம் ரூ.4.55 கோடி வருமானம் கிடைத்திருக்கும்.
Pension planning
ஓய்வு பெறும்போது கையில் ரூ.5.12 கோடி இருக்கும். இதில் 60 சதவீத தொகையை மட்டுமே எடுக்க முடியும். அதாவது சுமார் 3 கோடி ரூபாய் எடுக்க முடியும். மீதமுள்ள ரூ.2 கோடி வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும்.
NPS Pension
NPS திட்டத்தில் டெபாசிட் செய்த பணத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க முடியாது. ஆனால் அவசரநிலை ஏற்பட்டாலோ, மருத்துவச் செலவு, வீடு கட்டுதல், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்காக குறிப்பிட்ட அளவு தொகையை எடுத்துக்கொள்ளலாம். பணத்தை எடுப்பதற்கான விதிகள் எந்த நேரத்திலும் மாறுதலுக்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
Rs 2.5 lakh pension
இத்திட்டத்தில் முதிர்வுத் தொகை முழுவதையும் வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் அதிகமான பென்ஷனைப் பெறலாம். வருடாந்திரத் திட்டத்தில் சுமார் 5-6 சதவீத வட்டி கிடைப்பதாக வைத்துக்கொண்டால், 5.12 கோடி ரூபாய்க்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2.13 லட்சம் முதல் 2.56 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.