ரூ.107 & ரூ.108-க்கு 35நாளுக்கான ரீசார்ஜ் பிளானா? சான்சே இல்ல! - அதிரவிடும் BSNL!
கம்மி விலையில் ஒரு மாத்ததிற்கும் கூடுதல் நாட்களுக்கு வேலிடிட்டி தரும் அட்டகாசமான திட்டங்களை BSNL அறிவித்துள்ளது. அவை என்னென்ன திட்டங்கள் என்பதை இப்பதிவில் காணலாம்.
மொபைல் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்டவை அடிப்படை ரீசார்ஜ் பிளான் கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், BSNL மட்டும் கம்மி விலையில் பல திட்டங்களை புதிதாக அறிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து, ஏராளமான மக்கள் தங்கள் மொபைல் எண்களை BSNL-க்கு மாற்றி வருகின்றனர்.
மேலும், வரும் மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்க (BSNL)பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையும் வழங்க அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. BSNL வெறும் ரூ.107 மற்றும் ரூ.108க்கு 35 நாட்களுடன் கூடிய ப்ரிபெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
BSNL Rs.107 Prepaid Recharge Plan
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.107 ரீச்சார்ச் திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மற்ற மொபைல் நிறுவனங்களில் 20 அல்லது அதற்கும் குறைவான நாட்கள்தான் இதுபோன்ற விலைக்கு வழங்கப்படுகிறது. மிக மிக குறைந்த விலையில் 35 நாட்கள் வேலிடிட்டி என்பதே மிகச்சிறந்த திட்டம் தான். மேலும் இதனுடன் 3GB டேட்டா, 200 நிமிட வாய்ஸ் கால்கள், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. குறைந்த விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி வேண்டும் என எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
BSNL Rs.108 Prepaid Recharge Plan
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.108 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இத்திட்டதில் தினமும் 1GB டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியும் கொடுக்கிறது.
இதனிடையே, BSLN-லிருந்து 4ஜி மற்றும் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 2025-க்குள் ஒரு லட்சம் டவர்களில் 4ஜி நெட்வொர்க் கொண்டுவரப்படும் என்றும் அமச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.