MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஏடிஎம் கட்டணங்கள் மாறிப்போச்சு.. மறக்காம நோட் பண்ணுங்க உஷார்!

ஏடிஎம் கட்டணங்கள் மாறிப்போச்சு.. மறக்காம நோட் பண்ணுங்க உஷார்!

இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இலவச பரிவர்த்தனை வரம்பு குறைக்கப்பட்டு, கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். புதிய விதிகள் மற்றும் கட்டணங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 23 2025, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஏடிஎம் புதிய விதிகள்
Image Credit : our own

ஏடிஎம் புதிய விதிகள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் இலவச பரிவர்த்தனை வரம்பு, பணம் வைப்பு-எடுப்பு விதிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்றவை அடங்கும். புதிய விதிகள் என்ன, எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பதை தெரிந்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியம்.

25
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Image Credit : our own

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

முதலில் மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனை (பணம் திரும்பப் பெறுதல் + இருப்பு சரிபார்ப்பு) செய்யலாம். நான்-மெட்ரோ (சிறிய நகரங்கள், கிராமப்புறம்) ஆகிய இடங்களில் 5 இலவச பரிவர்த்தனை செய்ய அனுமதி உண்டு. இதை மீறி ஏடிஎம் பயன்படுத்தினால், வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.

Related Articles

Related image1
வாவ்! ஆரம்பமே ரூ.13 லட்சம் சம்பளம்.. பேங்க் மேனேஜர் ஆகணுமா? A to Z முழு விவரம் இதோ!
Related image2
கிராமப்புற வளர்ச்சி தூள்.! விலைவாசி உயரும்.! ரிசர்வ் வங்கியே சொல்லிட்டு புரோ.!
35
ATM பணம் எடுக்கும் கட்டணம்
Image Credit : our own

ATM பணம் எடுக்கும் கட்டணம்

இலவச வரம்பை கடந்த பிறகு, ஒரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.23 + GST ​​வரை வங்கிகள் கட்டணம் எடுக்கும். பணம் எடுக்காத சேவைகள் (நிதி அல்லாத பரிவர்த்தனைகள்), உதாரணமாக இருப்பு சரிபார்ப்பு போன்றவற்றுக்கு சில வங்கிகள் ரூ.11 வரை கட்டணம் வசூலிக்கின்றன. உதாரணமாக PNB வங்கியில் நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23, நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.11, HDFC வங்கியில் பிளாட் ரூ.23. ஆனால் SBI வங்கியில் பழைய விகிதங்களே தற்போது நடைமுறையில் உள்ளன.

45
இலவச பரிவர்த்தனை வரம்பு
Image Credit : our own

இலவச பரிவர்த்தனை வரம்பு

பண வைப்பு (வைப்பு) பொதுவாக பண மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் செய்யும்போது கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், பணம் எடுக்கும் அளவு வரம்பை மீறினால், வங்கிகள் தனித்தனி விதிமுறைகளின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும், ஒரு ஆண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் வைப்பதற்கு அல்லது எடுப்பதற்கு பான் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம். இந்த விதி கருப்பு பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

55
பரிவர்த்தனை கூடுதல் கட்டணம்
Image Credit : our own

பரிவர்த்தனை கூடுதல் கட்டணம்

தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க சில வழிகள் உள்ளன. உங்கள் தனது வங்கியின் ஏடிஎம்-ஐ பயன்படுத்துவது சிறந்தது. இருப்புச் சரிபார்ப்பு அல்லது அறிக்கையைப் பார்க்க ஏடிஎம்-க்கு செல்வதற்குப் பதிலாக நெட்பேங்கிங் / மொபைல் பேங்கிங் பயன்படுத்தலாம். மாதந்தோறும் ஏடிஎம் செயலியை கவனத்தில் வைத்துக்கொண்டால் தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
தானியங்கி பண இயந்திர பரிவர்த்தனைக் கட்டணங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
வாவ்! ஆரம்பமே ரூ.13 லட்சம் சம்பளம்.. பேங்க் மேனேஜர் ஆகணுமா? A to Z முழு விவரம் இதோ!
Recommended image2
கிராமப்புற வளர்ச்சி தூள்.! விலைவாசி உயரும்.! ரிசர்வ் வங்கியே சொல்லிட்டு புரோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved