வங்கி லாக்கரில் உள்ள பொருள் காணாமல் போனால்... ஆர்பிஐ விதிகள் சொல்வது என்ன?
RBI Bank Locker Rules: லக்னோவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் வங்கிகளில் உள்ள லாக்கர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதைப் பற்றி பல விதிகளை உருவாக்கியுள்ளது, இது ஒவ்வொரு வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Bank Locker Loss Compensation
லக்னோவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சின்ஹாட் கிளையில் நடந்த கொள்ளை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 42 லாக்கர்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இருப்பினும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு கொள்ளையர்களை என்கவுன்டரில் கொன்றனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Bank Locker Loot Case
ஆனால் லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை இழந்து மக்கள் கதறி அழும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பேங்க் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இதுபோன்ற சம்பவம் நடந்தால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி என்ன விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
Bank Locker New Rules by RBI
ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2022 இல் லாக்கர் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி, எந்தவொரு வாடிக்கையாளருக்கு இழப்பு ஏற்பட்டாலும், வங்கி எந்தக் காரணத்தையும் கூறி, இழப்பீடு தராமல் பின்வாங்க முடியாது. வாடிக்கையாளருக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும்.
Bank Locker Agreement
வங்கிகள் லாக்கர் ஒப்பந்தத்தில் நியாயமற்ற நிபந்தனைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இதனால் வாடிக்கையாளர் நஷ்டம் அடைந்தால் வங்கி எளிதில் தப்பிக்க முடியாது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி, வங்கிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முயலாமல் இருக்க இந்த விதியை ஆர்பிஐ கொண்டுவந்துள்ளது.
Locker responsibility of Banks
வங்கியின் அலட்சியத்தால் லாக்கர்களின் உள்ள பொருள்கள் ஏதேனும் காணாமல் போனால், வங்கிகள் இழப்பீடுத் தொகையை செலுத்த வேண்டும். லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். தீ விபத்து, கொள்ளை, கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் ஏற்படும் சேதம் போன்றவற்றைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் வங்கியின் பொறுப்பு. வங்கியின் குறைபாடுகள் அல்லது அலட்சியம் இழப்புக்குக் காரணமாகச் சொல்ல முடியாது.
Bank Locker Natural Disaster rules
லாக்கர் தொடர்பான புதிய ரிசர்வ் வங்கி விதியின்படி, லாக்கரால் ஏற்படும் இழப்புக்கு வங்கிகளே முழுப் பொறுப்பாகும். அதாவது வங்கியில் தீ, திருட்டு, கொள்ளை, கட்டிட இடிபாடு முதலிய காரணங்களால் வாடிக்கையாளருக்கு நிதி இழப்பு ஏற்பட்டால், வங்கியே அதை தாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற விபத்துகளை வங்கியால் தடுக்க முடியும். ஆனால், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்தாலோ அல்லது இழந்தாலோ வங்கி பொறுப்பேற்காது. அதாவது முழு இழப்பையும் வாடிக்கையாளர்தான் ஏற்க வேண்டும்.
Bank Locker Rent
இழப்பீடு தொடர்பாகவும் ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் உள்ளன. வங்கி லாக்கரில் உள்ள பொருளின் மதிப்பு லாக்கரின் ஆண்டு வாடகையை விட 100 மடங்கு வரை மட்டுமே இருக்கலாம். எனவே ஆண்டு வாடகையை விட 100 மடங்குக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை லாக்கரில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக, லாக்கரின் ஆண்டு வாடகை ரூ.1000 என்றால், லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காணாமல் போனால், வாடிக்கையாளருக்கு 100 மடங்கு வாடகை அதாவது ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடாகக் கிடைக்கும்.