- Home
- Business
- ரயில்வே ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.! 8-வது ஊதியக் குழுவும், எகிறப்போகும் ALK அலவன்ஸும்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!
ரயில்வே ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.! 8-வது ஊதியக் குழுவும், எகிறப்போகும் ALK அலவன்ஸும்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!
Railway Employees Salary Hike 2026 : ரயில்வே ஊழியர்களுக்கு முக்கியமான படியாக கருதப்படும் கிலோமீட்டர் பயணத்திற்கு மாற்றான படி (ALK - Allowance in Lieu of Kilometerage) உயர்வு குறித்து இங்கு காணலாம்.

ALK (Allowance in Lieu of Kilometreage) என்றால் என்ன?
லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகள் ஆகியோர்களுக்கு அவர்கள் கடக்கும் தூரத்தின் அடிப்படையில் மைலேஜ் அலவன்ஸ் (Mileage Allowance) வழங்கப்படுகிறது. இவர்கள் தங்களின் வழக்கமான ஓடும் பணியை (Running Duties) செய்யாமல் சிறப்பு பணிகளில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட வழங்கப்படுவதே இந்த ALK படி ஆகும். லோகோ பைலட்டுகள், உதவி பைலட்டுகள், ரயில் மேலாளர்களுக்கு (Guards) இந்த படி வழங்கப்படுகிறது.
8-வது ஊதியக் குழுவில் ALK படியின் தாக்கம்
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ALK கணக்கிடப்பட்டு வருகிறது. எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வரும் பொழுது ALK உயரும் வாய்ப்புகள் உண்டு. ALK என்பது அடிப்படை ஊதியத்துடன் தொடர்புடையது என்பதால் அடிப்படை ஊதியம் உயரும் போது, ALK தொகையும் தானாகவே உயரும். தற்போதைய விதிகளின்படி ஒரு ரன்னிங் ஊழியர் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலோ அல்லது பயிற்சியில் இருந்தாலோ அவருக்கு வழங்கப்பட வேண்டிய ALK படி அந்த காலகட்டத்தின் மைலேஜ் விகிதத்தை பொறுத்து அமையும்.
ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
இந்த நிலையில் ராம நவமிக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கு கிலோமீட்டர் படி மற்றும் கிலோ மீட்டருக்கு பதிலாக வழங்கும் படி (ALK) ஆகியவற்றின் விகிதங்களை திருத்தி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு மற்றும் தேசிய இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே கூட்டமைப்புகள் நீண்ட காலமாக இந்த கோரிக்கையை எழுப்பி வந்த நிலையில், தற்போது இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரிய நிதி இயக்குனருடன் கலந்தாலசித்து ஆராயப்பட்ட பின்னர், ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்தின் செலவினத்துறைக்கு இது அனுப்பப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய ரயில்வேயின் செயல்பாடுகளுக்கு முதுகெலும்பாக விளங்கும் பணியாளர்களின் நலம் மற்றும் நிதி மேம்பாட்டுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படி விகிதங்கள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன என்றும், கிலோமீட்டர் படி மற்றும் கிலோமீட்டருக்கு பதிலாக வழங்கப்படும் பகுதி ஆகியவற்றைப் பெறுவதற்கான தகுதி மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் மாற்றமின்றி அப்படியே இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முக்கியமான குறிப்பு
இந்த திருத்தம் நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகளின் அடிப்படைச் சம்பளம் உயரும். அதன் விளைவாக, அவர்கள் ரயிலை இயக்காத நேரத்திலும் பெறும் ALK படி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

