PPF திட்டத்தில் 10 ஆயிரம் போட்டா, 82 லட்சம் கிடைக்கும்! பைசா வசூல் பிளான்!
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 7.1% வட்டி பெறலாம். ரூ.10,000 மாதாந்திர முதலீடு 25 ஆண்டுகளில் ரூ.82.46 லட்சமாக வளரும். இந்தத் திட்டம் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
Public Provident Fund Scheme
பொது வருங்கால வைப்புநிதி: பிபிஃஎப் (PPF) என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Public Provident Fund Scheme) மிகவும் பிரபலமானது. பலர் அதில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 7.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
PPF Scheme
ரூ.500 முதல் தொடங்கலாம்: பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்வது வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. ஒரு நிதியாண்டில், அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
Public Provident Fund
10,000 ரூபாய் மாதாந்திர முதலீடு: பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முடியும். 15 வருட முதலீட்டு காலத்திற்குப் பிறகு, கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடரலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால், 82.46 லட்சம் ரூபாய் வருமானம் பெறலாம்.
Pension planning
ரூ. 82 .46 லட்சம் முதிர்வுத்தொகை: பிபிஎஃப் (PPF) திட்டத்திற்கான கணக்கை துவங்கிய பிறகு மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு ரூ. 1,20,000 டெபாசிட் செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் PPF கணக்கில் இதே தொகையை முதலீடு செய்தால், தற்போதைய 7.1% வட்டி விகிதத்தின்படி, ரூ. 82,46,412 வருமானம் கிடைக்கும்.
PPF investment
பாதுகாப்பான எதிர்கால நிதி: குறிப்பாக தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய PPF திட்டம் சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிபிஎஃப் (PPF) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம்.