- Home
- Business
- Post Office SCSS: ரிட்டயர்மென்ட்டுக்கு பிறகு மாதம் ரூ.10,000+ வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம்!
Post Office SCSS: ரிட்டயர்மென்ட்டுக்கு பிறகு மாதம் ரூ.10,000+ வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம்!
Post Office SCSS: ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு மாசாமாசம் ஒரு நிலையான வருமானம் வர வேண்டுமா? உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் ஒரு சூப்பரான திட்டத்தை வைத்துள்ளது. அது என்ன திட்டம், அதன் லாபங்கள் என்ன என்று முழுமையாக பார்க்கலாம்.

ரிட்டயர்மென்ட்டுக்குப் பின் பாதுகாப்பான வருமானம்
ரிட்டயர்மென்ட் காலத்தில் மாசாமாசம் நிலையான வருமானம் வருவது ரொம்ப முக்கியம். அந்த வயதில் ரிஸ்க் எடுக்க யாருக்கும் விருப்பம் இருக்காது. நாம் போட்ட பணம் பத்திரமாக இருக்க வேண்டும், செலவுக்கு ஏற்ற வருமானம் வர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்கு போஸ்ட் ஆபிஸ் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு சூப்பரான தீர்வாகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?
அரசாங்கம் இந்தத் திட்டத்தை 60 வயது முடிந்தவர்களுக்காகவே கொண்டு வந்துள்ளது. இது முழுமையாக அரசு திட்டம் என்பதால், உங்கள் முதலீட்டுக்கு 100% பாதுகாப்பு கிடைக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் இதை பாதிக்காது. எந்த ரிஸ்க்கும் இல்லாமல், தொடர்ந்து நிலையான வருமானம் வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இது ரொம்பவே செட் ஆகும்.
வட்டி விகிதம் மற்றும் வருமான விவரங்கள்
போஸ்ட் ஆபிஸ் இப்போதைக்கு இந்தத் திட்டத்துக்கு வருடத்துக்கு 8.2 சதவீத வட்டி தருகிறார்கள். வங்கி பிக்சட் டெபாசிட்டுகளை விட இந்த வட்டி விகிதம் அதிகம். நீங்கள் ஒரு தடவை முதலீடு செய்தால், அந்தத் திட்டம் முடியும் வரைக்கும் அதே வட்டிதான் கிடைக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், வருடத்துக்கு சுமார் ரூ.1,23,000 வட்டி கிடைக்கும். அதாவது மாதம் ரூ.10,250 வருமானம் வரும்.
வட்டி எப்படி கொடுப்பாங்க? எத்தனை வருடத் திட்டம்?
போஸ்ட் ஆபிஸ் இந்தத் திட்டத்தில் மாசாமாசம் வட்டி தராது. அவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு தடவைதான் வட்டியை கணக்கில் சேர்ப்பார்கள். ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகப் பணம் வந்துவிடும். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 வருடம். நீங்கள் தேவைப்பட்டால், 5 வருடம் முடிந்ததும் இதை நீட்டித்துக் கொள்ளலாம்.
வரி சலுகைகள் மற்றும் முக்கிய தகவல்கள்
நீங்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால், நீங்கள் கணக்கை முன்கூட்டியே க்ளோஸ் செய்தால் கொஞ்சம் அபராதம் கட்ட வேண்டி வரும். நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,000-லிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானம் எதிர்பார்க்கும் மூத்த குடிமக்களுக்கு இது ஒரு நம்பகமான திட்டமாகும்.
கணக்கை நீட்டிக்கும் புதிய விதிமுறைகள்
முன்பு இத்திட்டத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் தற்போதைய விதிகளின்படி, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் தலா 3 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு முதிர்ச்சி அடைந்த தேதியிலிருந்து 1 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

