20 ரூபாய் இன்சூரன்ஸ்! போஸ்ட் ஆபிசில் இந்த பாலிசி எடுத்தா ரூ.2 லட்சம் கிடைக்கும்!
வெறும் 20 ரூபாய்க்கு போஸ்ட் ஆபிசில் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இந்த இன்சூரன்ஸ் பாலிசி மூலம் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கிடைக்கும். இத்திட்டம் அனைவருக்கும் காப்பீட்டின் பலன் கிடைப்பதை உறுதிசெய்கிறது.
20 rupees
வாழ்க்கையில் எப்போது, யார் எந்தப் பிரச்சனையைச் சந்திப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே, எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலையையும் சமாளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதனால், இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமான தேவையாக மாறிவிட்டது.
ஆனால், நிதி ரீதியாக பலவீனமானவர்கள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத்தை செலுத்த முடியாமல் சிரமப்படலாம். அவர்களுக்கு காப்பீட்டின் பாதுகாப்பை அளிக்க, இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY).
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதன் பிரீமியமும் மிகக் குறைவாக வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் எளிதாக செலுத்த முடியும். இத்திட்டத்தின் பலன்களைப் பெற, ஆண்டுக்கு ரூ.20 மட்டும் பிரீமியமாகச் செலுத்தினால் போதும்.
இத்திட்டத்தின் நோக்கம் இந்தியாவின் அதிக மக்கள்தொகைக்கு பாதுகாப்பு காப்பீடு வழங்குகிறது. முன்னதாக இத்திட்டத்தின் ஆண்டு பிரீமியம் ரூ.12 ஆக இருந்தது. இது ஜூன் 1, 2022 முதல் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. இருந்தாலும், இதுவும் குறைவான ப்ரீமியம் தொகை என்பதால் ஏழை மக்களும் எளிதாகச் செலுத்த முடிகிறது.
Free Treatment for All Indian Citizens Above 70 years with Ayushman Bharat Health Insurance Scheme
விபத்தின்போது காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், அவரது நாமினிக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனை 18 வயது முதல் 70 வயது வரை பெறலாம். பயனாளியின் வயது 70 அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த பாலிசி கிடைக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதிக்கு முன் காப்பீட்டுத் தொகை உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், நாமினிக்கு ரூ.2 லட்சம் வரை உதவி வழங்கப்படும். இது தவிர, கண்கள் முழுமையாக குணமடையாமல், கை, கால்களை இழந்தால், ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் முழுவதுமாக இழந்தால், 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால், 1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவிற்கு வழங்கப்படும் ஆண்டு பிரீமியம் ரூ.20 ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். விபத்து காரணமாக மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால், விதிகளின்படி காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
New Health Insurance Initiative- Now, Cashless Hospitalisation At All Hospitals, Even Non-Empanelled Ones
பாலிசிதாரரின் வயது 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். பாலிசிதாரர் செயல்பாட்டில் உள்ள சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். கணக்கு மூடப்படும் பட்சத்தில் பாலிசியும் காலாவதியாகிவிடும். பாலிசி பிரீமியத்தை சேமிப்புக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.