MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பாப்கார்ன், பீட்சா டூ ஐஸ்கிரீம் வரை... ரூ.300 கோடி வணிகமாக உருவெடுத்த டி-மார்ட்டின் ஃபாஸ்ட் ஃபுட் கவுண்டர்கள்!

பாப்கார்ன், பீட்சா டூ ஐஸ்கிரீம் வரை... ரூ.300 கோடி வணிகமாக உருவெடுத்த டி-மார்ட்டின் ஃபாஸ்ட் ஃபுட் கவுண்டர்கள்!

மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பெயர் பெற்ற டி-மார்ட் ரீடெய்ல் சூப்பர் மார்க்கெட்டுகளில் செயல்பட்டு வரும் உடனடி உணவு விற்பனை கவுண்டர்கள், தற்போது ரூ.300 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் தனிப் பெரும் வணிகமாக உருவெடுத்துள்ளன.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 04 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி மார்ட் பாப்கார்ன் ஐஸ்கிரீம் பிசினஸ்
Image Credit : DMart

டி-மார்ட் பாப்கார்ன் ஐஸ்கிரீம் பிசினஸ்

டி-மார்ட் என்றாலே குறைந்த விலையில் கிடைக்கும் மளிகைப்பொருட்கள், FMCG பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். ஆனால், டி-மார்ட் கடைகளில் சாப்பிங் முடித்த பிறகு பாப்கார்ன், ஐஸ் கிரீம் அல்லது Quick Food வாங்கும் வாடிக்கையாளர்களை கவனித்திருக்கிறீர்களா? அந்தச் சிறிய உணவு பிசினஸ் தற்போது ரூ.300 கோடியைத் தாண்டிய வருவாய் கொண்ட தனி வணிகமாக வளர்ந்துள்ளது.

ரூ.306.9 கோடியாக உயர்ந்த வருவாய்

டி-மார்ட் -ஐ நடத்தும் Avenue Supermarts நிறுவனத்தின் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான Avenue Food Plaza Private Limited (AFPPL), டி-மார்ட் கடைகளுடன் தொடர்புடைய Food Outlets-ஐ நடத்துகிறது. FY2025-26-ல் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.306.90 கோடியாக இருந்துள்ளது. FY2024-25-ல் இது ரூ.226.50 கோடியாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் சுமார் 35.5% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைவிட முக்கியமான மாற்றம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்த இந்த உணவு பிசினஸ் FY26-ல் ரூ.9.39 கோடி லாபத்திற்கு திரும்பியுள்ளது. FY25-ல் இதற்கு ரூ.9.66 கோடி நஷ்டம் இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.300 கோடி கொட்டிய பாப்கார்ன், ஐஸ்கிரீம்!
Image Credit : X

ரூ.300 கோடி கொட்டிய பாப்கார்ன், ஐஸ்கிரீம்!

பாப்கார்ன், ஐஸ் கிரீமில் தொடங்கிய பிசினஸ்

ஆரம்பத்தில் டி-மார்ட் கடைகளில் Checkout Counter-களுக்கு அருகில் பாப்கார்ன், ஐஸ் கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்வதிலேயே இந்த உணவு பிசினஸ் கவனம் செலுத்தியது. காலப்போக்கில் இது வெறும் Snacks Counter என்ற நிலையிலிருந்து Ready-to-Eat Food Outlet என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. தற்போது பீட்சா உள்ளிட்ட Quick-Service Food வகைகளும் இந்த Business-ன் ஒரு பகுதியாக மாறியுள்ளதாக Moneycontrol தெரிவித்துள்ளது. அதாவது, Shopping செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சாப்பிடக்கூடிய உணவுகளை வழங்கும் சிறிய Food Outlet மாடலாக இது மாறியுள்ளது.

வெறும் 4 ஆண்டுகளில் 600%க்கும் மேல் வளர்ச்சி!

இந்த உணவு பிசினஸ் எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை வருவாய் மூலம் புரிந்துகொள்ளலாம். FY2022-ல் Avenue Food Plaza-வின் வருவாய் சுமார் ரூ.43.3 கோடி. FY2026-ல் ரூ.306.9 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 4 ஆண்டுகளில் வருவாய் 600%க்கும் மேல் அதிகரித்து உள்ளது. இதே காலத்தில் டி-மார்ட் -ன் Store Network 284 கடைகளிலிருந்து 500 கடைகளாக, சுமார் 76% மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால், கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கடையிலும் Food Business-ன் பயன்பாடும் அதிகரித்திருக்கலாம் என்பதை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன.

34
4 வருசத்துல 600% வளர்ச்சி!
Image Credit : Gemini AI

4 வருசத்துல 600% வளர்ச்சி!

கொரோனா காலத்தில் கடும் சரிவு

இந்த உணவு பிசினஸின் பயணம் எப்போதும் ஒரே மாதிரி இருந்துவிடவில்லை. கொரோனா காலத்தில் டி-மார்ட் கடைகளில் உள்ள உணவு கவுண்டர்களில் பாதிக்கப்பட்டன. FY2021-ல் Avenue Food Plaza-வின் வருவாய் 54% சரிந்து ரூ.14.9 கோடியாக குறைந்தது. அதன்பிறகு பிசினஸ் மீண்டும் வளரத் தொடங்கியது. FY2022-ல் வருவாய் ரூ.43 கோடியைத் தாண்டியது; அதன்பிறகு தொடர்ந்து வளர்ந்து FY2026-ல் ரூ.306.9 கோடியை எட்டியுள்ளது.

ரூ.300 கோடி பிசினஸ் எப்படி உருவானது?

இதற்கு முக்கிய காரணம் டி-மார்ட் -ன் Shopping Model. ஒருவர் Grocery, FMCG, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக டி-மார்ட் -க்கு வருகிறார். Shopping முடிக்கும் நேரத்தில் கடைக்குள்ளேயே அல்லது வெளியே கிடைக்கும் Quick Food-ஐ வாங்கும் வாய்ப்பும் உருவாகிறது. இதன் மூலம் ஒரே வாடிக்கையாளரிடமிருந்து Grocery Sales மட்டுமின்றி Food Sales-ஐயும் பெற முடிகிறது. மேலும் டி-மார்ட் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அந்தக் கடைகளுடன் இணைந்த உணவு பிசினஸுக்கும் வளர வாய்ப்பு உருவாகிறது.

44
டி-மார்ட் போட்ட இந்த கணக்கு ஜெயிச்சது எப்படி?
Image Credit : Google

டி-மார்ட் போட்ட இந்த கணக்கு ஜெயிச்சது எப்படி?

டி-மார்ட்-க்கு இது ஏன் முக்கியம்?

டி-மார்ட்-ன் முக்கிய பிசினஸ் இன்னும் Grocery, FMCG மற்றும் General Merchandise & Apparel போன்ற பிரிவுகள்தான். ஆனால் Food Plaza போன்ற துணை பிசினஸ்களும் நிறுவனத்தின் மொத்த வணிகச் சூழலில் கூடுதல் வருவாய் வாய்ப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக, Avenue Food Plaza FY26-ல் நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு மாறியுள்ளது என்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

அடுத்த முறை டி-மார்ட் செல்லும்போது Shopping Basket-ஐ மட்டும் கவனிக்காமல், Checkout அருகிலுள்ள Food Counter-ஐயும் கவனியுங்கள். ஒரு காலத்தில் பாப்கார்ன், ஐஸ் கிரீம் போன்ற சிறிய ஸ்னாக்ஸ் விற்பனையிலிருந்து தொடங்கிய இந்த பிசினஸ், தற்போது ஆண்டுக்கு ரூ.306.9 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதுதான் டி-மார்ட் -ன் பெரிய ரீ-டெய்ல் பிசினஸ்-க்குள் உருவாகியிருக்கும் ஒரு சிறிய ஆனால் வேகமாக வளர்ந்து வரும் உணவு பிசினஸ் கதை!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐபோன் 18 ப்ரோ வட்டி இல்லாத EMI.! மறைந்திருக்கும் உண்மை என்ன?
Recommended image2
1 Rupee candy business: பல தசாப்தங்களாக 1 ரூபாய் சாக்லேட்டின் விலை மட்டும் மாறாதது ஏன்? பின்னால் ஒளிந்திருக்கும் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Ration Card: 6 மாதமா ரேஷன் பொருள் வாங்கலையா? உங்க கார்டு கேன்சல் ஆகுமா? முழு உண்மை இதோ
Related Stories
Recommended image1
DMart Carry Bag: டிமார்ட்டில் கேரி பேக்குக்கு பணம் கொடுக்கிறீங்களா? இந்த தீர்ப்பை தெரிஞ்சுக்கோங்க
Recommended image2
DA Hike 2026: அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு! ஜூலையில் அரியர்ஸ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விபரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved