MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக குறையும்.! ஏன் தெரியுமா?

Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக குறையும்.! ஏன் தெரியுமா?

Petrol Diesel Price: அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றத்தால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், வரும் வாரங்களில் இந்தியாவில் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 25 2026, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை
Image Credit : Getty

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, வாகன ஓட்டிகளுக்கு பெரிய சுமையாக மாறியிருந்தது. தினசரி வேலைக்காக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை பயன்படுத்தும் பொதுமக்கள், எரிபொருள் செலவால் கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர். கடந்த 10 நாட்களில் 4 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றம், இந்திய மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்வதேச கச்சா எண்ணெய் விலை திடீரென சரிவு
Image Credit : X

சர்வதேச கச்சா எண்ணெய் விலை திடீரென சரிவு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை திடீரென சரிவடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக வெளியான தகவல்கள் உலக சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பதற்றம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியதால், எண்ணெய் விலைகள் வேகமாக கீழிறங்கத் தொடங்கியுள்ளன.

Related Articles

Related image1
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
Related image2
Business Ideas: இந்த தொழில்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்... IAS, IPS அதிகாரிகளை விட அதிகம் சம்பாதிக்கலாம்!
35
இந்த மாற்றம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
Image Credit : X

இந்த மாற்றம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது. அதேபோல் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தியா தனது எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தால், அதன் பலன் நேரடியாக இந்திய மக்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். 

45
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் வாய்ப்பு
Image Credit : X

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் வாய்ப்பு

மேலும், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் குறைந்தால், எண்ணெய் விநியோகம் சீராகும். இதனால் எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் குறையும். நிபுணர்கள் கூறுவதன்படி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இதேபோல் குறைந்த நிலையில் இருந்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

55
விலை குறைப்பு எப்போது?
Image Credit : ANI

விலை குறைப்பு எப்போது?

இருப்பினும், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் முயற்சி காரணமாக உடனடி விலை குறைப்பு அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் சர்வதேச சந்தையின் தற்போதைய நிலையைப் பார்த்தால், வரும் வாரங்களில் மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தச் செய்தி தினமும் வாகனம் பயன்படுத்தும் நடுத்தர மக்களுக்கு மட்டுமல்லாமல், சரக்கு போக்குவரத்து, விவசாயம் மற்றும் வணிக துறைகளுக்கும் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எரிபொருள் விலை குறைந்தால், பல பொருட்களின் விலையும் கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பெட்ரோல் டீசல் விலை
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Timing Change: இரவு 11 மணிக்கும் பேங்க் திறக்குமா? மாசம் 8 நாள் லீவு! வருது புது ரூல்ஸ்?
Recommended image2
Gold Investment: இன்னைக்கு ரூ.1 லட்சத்துக்கு தங்கம் வாங்கினா 2050-ல் எவ்வளவு ஆகும்? கணக்கு இதோ!
Recommended image3
8th Pay Commission: AICPI-IW குறியீடு உயர்வு! ஜனவரி 2027-ல் அகவிலைப்படி 66-67% ஆகலாம்!
Related Stories
Recommended image1
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
Recommended image2
Business Ideas: இந்த தொழில்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்... IAS, IPS அதிகாரிகளை விட அதிகம் சம்பாதிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved