MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பெட்ரோல், டீசல், சிலிண்டரை தொடர்ந்து.! அடுத்து உயரப்போவது இதுதான்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பெட்ரோல், டீசல், சிலிண்டரை தொடர்ந்து.! அடுத்து உயரப்போவது இதுதான்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகள் உயர்ந்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 02 2026, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : X

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தொடங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி 28 இன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

25
Image Credit : X

அதுமட்டுமல்லாமல் சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வரும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்து, அந்த ஜலசந்தியை முடக்கி முழுவதுமான ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், பல ஐரோப்பிய நாடுகளுக்கும் கடல் வழியாக எரிபொருள் கொண்டுசெல்ல ஹார்முஸ் ஜலசந்தி முக்கிய வழித்தடமாக உள்ளது.

Related Articles

Related image1
வேலையை விட்டால் 48 மணிநேரத்தில் செட்டில்மென்ட்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. புது ரூல்ஸ் வந்தாச்சு!
Related image2
வாகன ஓட்டிகளுக்கு பேரிடி.. டீசல் ரூ.25, பெட்ரோல் ரூ.7.41 உயர்வு..! நாடு முழுவதும் புதிய விலை அமல்
35
Image Credit : Google

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுபாடு உருவாகியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய்யின் விலையும் எகிறியுள்ளது. இந்த போரினால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பொருளாதார ரீதியாகவும் கடும் இழப்புகளை சந்தித்துள்ளது. பல்வேறு தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்தியாவை பொருத்தவரை வணிக சிலிண்டர் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாலும், விலை ஏற்றம் மட்டுமல்லாமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

45
Image Credit : X

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் நிறுவனமான நயாரா எனர்ஜி, ஷெல் இந்தியா ஆகிய இரண்டின் விலைகளையும் கடுமையாக உயர்த்தியுள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதைத் தணிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்த்து வருகிறோம்.

55
Image Credit : AI Meta

இந்நிலையில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை தொடர்ந்து சிமெண்ட் விலையும் அதிரடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சிமெண்ட் தயாரிக்க தேவையான குறிப்பிட்ட சில மூலப்பொருட்கள் வளைகுடா நாடுகளில் இருந்து வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மூலப்பொருட்களை கொண்டு வருவதில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் சிமெண்ட் ரூ.50 வரையிலும், இரும்பு டன்னுக்கு ரூ.2,000 வரையிலும் உயர்வு என உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஈரான்
வணிகம்
இசுரேல்
பெட்ரோல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யுங்க… ரூ.200 திரும்ப கிடைக்கும்! சூப்பர் ஆஃபர்!
Recommended image2
வாகன ஓட்டிகளுக்கு பேரிடி.. டீசல் ரூ.25, பெட்ரோல் ரூ.7.41 உயர்வு..! நாடு முழுவதும் புதிய விலை அமல்
Recommended image3
வேலையை விட்டால் 48 மணிநேரத்தில் செட்டில்மென்ட்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. புது ரூல்ஸ் வந்தாச்சு!
Related Stories
Recommended image1
வேலையை விட்டால் 48 மணிநேரத்தில் செட்டில்மென்ட்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. புது ரூல்ஸ் வந்தாச்சு!
Recommended image2
வாகன ஓட்டிகளுக்கு பேரிடி.. டீசல் ரூ.25, பெட்ரோல் ரூ.7.41 உயர்வு..! நாடு முழுவதும் புதிய விலை அமல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved