MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Paytm : அடிதூள் ஆஃபர்... இனி நீங்க பண்ற ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் தங்கக் காசு! எப்படி வாங்குறது?

Paytm : அடிதூள் ஆஃபர்... இனி நீங்க பண்ற ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் தங்கக் காசு! எப்படி வாங்குறது?

Paytm Gold Offer : இனி டீ, ஜூஸ், பில் பேமெண்ட், ரீசார்ஜ், மளிகைக் கடைன்னு Paytm-ல பண்ற எல்லா UPI பேமெண்ட்டுக்கும் தங்கக் காசு கிடைக்கும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்த ஆஃபர் மூலமா தங்கத்தை சேமிக்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 08 2026, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
How to Earn gold on UPI payments
Image Credit : X

How to Earn gold on UPI payments

இப்பல்லாம் இந்தியால பணத்த கையில வெச்சுக்கிற பழக்கமே குறைஞ்சிடுச்சு. நிறைய பேர் டிஜிட்டல் பேமெண்ட்டுக்கு மாறிட்டாங்க. வேலைக்குப் போகும்போது குடிக்கிற ஃபில்டர் காபி, வீட்டுக்கு வர்ற வழியில மளிகைக் கடையில வாங்குற சாமான், மொபைல் ரீசார்ஜ், ஆட்டோ கட்டணம், கரண்ட் பில்னு சின்னதுல இருந்து பெரிய பேமெண்ட் வரைக்கும் எல்லாமே UPI-லதான் நடக்குது. இப்போ நீங்க Paytm-ல பண்ற இந்த மாதிரி பரிவர்த்தனைகளுக்கு தங்கக் காசு தராங்க. தமிழ்நாட்டில் இருக்கிறவங்களுக்கு, அவங்க பண்ற ஒவ்வொரு பேமெண்ட்டையும் தங்கமா மாத்துற வாய்ப்பை Paytm கொடுத்திருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Paytm தங்கக் காசு வாங்குறது எப்படி?
Image Credit : Asianet News

Paytm தங்கக் காசு வாங்குறது எப்படி?

Paytm ஆப்ல நீங்க பண்ற ஒவ்வொரு தகுதியான பரிவர்த்தனைக்கும், அதோட மதிப்புல 1% கோல்டு காயின்ஸா கிடைக்கும். பக்கத்து கடைகள்ல பண்ற Scan & Pay, பில் பேமெண்ட்ஸ், மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் ஷாப்பிங், பணப் பரிமாற்றம்னு எல்லாத்துக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு 100 கோல்டு காயின்ஸையும் ரூ.1 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கமா மாத்திக்கலாம். உங்ககிட்ட 1,500 கோல்டு காயின்ஸ் சேர்ந்ததும், ஆப்-ல ‘Convert to Real Gold’னு ஒரு ஆப்ஷன் வரும். இதை யூஸ் பண்ணி, நீங்க சேகரிச்ச ரிவார்டை 24 காரட் சுத்தமான தங்கமா மாத்திக்கலாம். ஒருவேளை நீங்க Paytm UPI வழியா RuPay கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி பே பண்ணா, உங்களுக்கு கிடைக்கிற கோல்டு காயின்ஸ் டபுள் ஆகும்.

Related Articles

Related image1
Paytm-ல் வந்த புதிய வசதி! இனி கவலையே இல்லை.. 5 நிமிடத்தில் வங்கி கணக்கை இணைத்து, பணத்தை வாரி அள்ளலாம்!
Related image2
உஷார்.. PhonePe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
34
40 ஆயிரம் செலவு செஞ்சா எவ்வளவு தங்கம் கிடைக்கும்?
Image Credit : Getty

40 ஆயிரம் செலவு செஞ்சா எவ்வளவு தங்கம் கிடைக்கும்?

இந்த ரிவார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாதான் சேரும். ஒரு கணக்கு போட்டுப் பார்த்தா, மாசத்துக்கு சுமார் ரூ.40,000 தகுதியான Paytm பேமெண்ட்ஸ் பண்ற ஒருத்தரால, ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட ரூ.4,800 மதிப்புள்ள கோல்டு காயின்ஸ் சேர்க்க முடியும். இது குறுகிய காலத்துல பெரிய தங்கக் கட்டியை தராது. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா தங்கம் சேமிக்க இது ஒரு நல்ல வழி. தங்க விலை இப்போ வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கு. இந்த வருஷம் சென்னையில் 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டிடுச்சு. தங்கம் இன்னமும் ஒரு முக்கியமான நீண்ட கால சேமிப்புதான். இப்போ Paytm கொடுக்கிற இந்த ஆஃபர் மூலமா, நம்ம அன்றாட செலவுகள்ல இருந்தே தங்கம் சேமிக்கலாம்.

44
24 காரட் சுத்தமான தங்கம்
Image Credit : Freepik

24 காரட் சுத்தமான தங்கம்

Paytm-ல நீங்க சேமிக்கிற இந்த டிஜிட்டல் தங்கம், 24 காரட் சுத்தமான தங்கம். அது நிஜமாவே ரியல் தங்கமாக சேமித்து வைக்கப்படும். இந்த Paytm Gold திட்டத்தை MMTC-PAMP நிறுவனம் நிர்வகிக்குது. இது இந்திய அரசாங்கத்தோட MMTC Ltd மற்றும் சுவிட்சர்லாந்தின் MKS PAMP SA நிறுவனத்தோட கூட்டு முயற்சி. இந்த 24 காரட் தங்கம், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட, வங்கி பாதுகாப்பு கொண்ட லாக்கர்களில் சேமிக்கப்படுது. இதுக்கு எந்த சேமிப்பு கட்டணமும் கிடையாது. பயனர்கள் எப்போ வேணும்னாலும், அப்போதைய மார்க்கெட் விலைக்கு அதை விற்று, பணத்தை அவங்களோட பேங்க் அக்கவுண்ட் அல்லது UPI-க்கு மாத்திக்கலாம். இந்த கோல்டு காயின்ஸ் மூலமா கிடைக்கிற சேமிப்பு இல்லாம, Paytm ஆப்-ல ரூ.51-ல இருந்து கூட 24 காரட் டிஜிட்டல் தங்கம் வாங்கிக்கலாம். இதுவும் அப்போதைய மார்க்கெட் விலைக்கு கிடைக்கும். தினமும் தங்கம் சேமிக்க விரும்புறவங்க, Daily Gold SIP ஆப்ஷனையும் பயன்படுத்திக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
தங்கம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Recommended image2
DMart Offers: டிமார்ட் சீக்ரெட் ட்ரிக்: எந்த நாள்ல ஷாப்பிங் செஞ்சா அதிக தள்ளுபடி கிடைக்கும்?
Recommended image3
Hair Business : கோடிக்கணக்குல விலை போகும் சிக்கு முடி! இதுதெரியாம முடியை கொடுக்காதீங்க!
Related Stories
Recommended image1
Paytm-ல் வந்த புதிய வசதி! இனி கவலையே இல்லை.. 5 நிமிடத்தில் வங்கி கணக்கை இணைத்து, பணத்தை வாரி அள்ளலாம்!
Recommended image2
உஷார்.. PhonePe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ கொடுத்த முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved