ஓயோ செல்பவர்கள் கவனத்திற்கு.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. போன் மட்டும் போதும்
பல வேலைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்பது அனைவரும் அறிந்ததே. அறை முன்பதிவு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை ஆதார் கார்டு தேவை. ஆனால் இனி கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆதார் கார்டு
ஆதார், இந்தியர்களின் முக்கிய ஆவணம். பெயர், முகவரி போன்ற மாற்றங்களுக்கு 'இ-சேவை மையம்' செல்ல வேண்டியிருந்தது. இந்த சிரமத்தைக் குறைக்க UIDAI, இ-ஆதார் செயலியை வெளியிட்டுள்ளது. இ-ஆதார் செயலி ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டிலும் கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம். இதனால் ஆதார் கார்டை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
இந்த செயலியின் முக்கிய அம்சங்கள்?
ஆதார் கார்டை எடுத்துச் செல்ல தேவையில்லை. பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம். தேவைப்பட்டால் QR குறியீட்டைப் பகிரலாம். பெயர், வயது, முகவரி போன்றவற்றை எளிதாக புதுப்பிக்கலாம். இ-ஆதார் செயலியைத் திறந்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும். OTP மற்றும் முக அங்கீகாரத்தை முடித்து, 6 இலக்க கடவுச்சொல்லை அமைக்கவும்.
எந்த சேவைகளுக்கு மையம் செல்ல வேண்டும்?
மொபைலில் பல சேவைகள் கிடைத்தாலும், பயோமெட்ரிக் புதுப்பிப்பு மற்றும் புகைப்படத்தை மாற்றுதல் போன்ற சில சேவைகளுக்கு ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இவற்றை செயலியில் செய்ய முடியாது.