தங்கம் விலை குறைந்ததா.? நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியா.! இன்று சவரன் விலை என்ன.?
What is the price of gold today? தங்கத்தின் விலை கடந்த 9 ஆண்டுகளில் 44,000 ரூபாய் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Gold rate Today
தங்கத்தின் மீது முதலீடு
தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாட்டை விட இந்திய மக்களிடமே அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யும் நாடாக இந்தியா உள்ளது. திருமண நிகழ்வுகள், விஷேச நிகழ்வுகள் போன்றவற்றிக்காக அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
தங்கம் விலையானது கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு சவரன் 16ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டு ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 44ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
gold rate in chennai
அவசர தேவைக்கு உதவும் தங்கம்
தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் மட்டும் ஒரு லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் செலுத்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவசர தேவைக்கு எந்த நேரத்திலும் தங்கத்தை விற்க முடியும், அடகு வைக்க முடியும், இதுவே நிலம், கார், வீடு போன்றவற்றில் முதலீடு செய்தால் மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பணத்தை உடனடியாக பெற முடியாத நிலை உருவாகும். இதன் காரணமாகவே தங்கத்தை அதிகளவு மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
gold rate in tamilnadu
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
தற்போது உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல், இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல் போன்ற காரணத்தால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர வர்க்க மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் நகைக்கடைகளில் உள்ள நகைகளை வேடிக்கை பார்க்கும் காலம் ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கள்ளனர்.
gold rate
ஏறி இறங்கும் விலை
இந்தநிலையில் தங்கத்தின் விலையானது கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஒரு கிராம் 7ஆயிரத்து 140 ரூபாய்க்கும், சவரன் 57ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து 6ஆம் தேதி 9வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலையானது குறைந்தது. ஒரு கிராம் 25 ரூபாய் குறைந்து 7115 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 56, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 7ஆம் தேதி தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.
Gold Rate today
தங்கத்தின் விலையில் மாற்றமா.?
இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க வியாபார சந்தை விடுமுறை காரணமாக விலையில் எந்த வித ஏற்றம் இறக்கம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. எனவே நாளை வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.