நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கம் விலை இன்று சவரன் எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் 63,000 ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

gold rate
தங்கம் என்பது சேமிப்பு மட்டுமில்லாமல் தங்களது அந்தஸ்தை உயர்த்தி காட்டும் ஆபரணமுமாகும். அந்த வகையில் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்கள் தான் தங்க நகைகளை அதிகளவு விரும்பி வாங்குகிறார்கள். பண்டிகை, திருமண நாட்கள் போன்ற நேரங்களில் தங்க ஆபரணங்களை அணிய விருப்பப்படுவார்கள். எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் உயர் வகுப்பு மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்கு உதவும் தங்கம்
மேலும் தங்க நகைகளானது அத்தியாவசிய தேவைக்கு உதவும் பொருளாகவும் இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் விற்பனை செய்தோ அல்லது அடகு வைத்தோ பணத்தை வாங்க முடியும். எனவே நடுத்தர வர்க்க மக்கள் இதற்காகவே தங்கத்தை ஒரு சேமிப்பு பொருளாக பார்க்கின்றனர்.
ஆனால் தற்போதோ நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆண்டாக மாறியுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் முறையாக தங்கம் விலை 60 ஆயிரத்தை தாண்டியது. இதனையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
நேற்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.